ஒரு வரி செய்திகள்

 தமிழகம் முழுவதும் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பா.ஜ.,வுக்கு ஆதரவு திரட்டுவேன். மேலும், அசாம், மேற்கு வங்கம் மாநிலங்களுக்கும் சென்று, எங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளேன்.

- நடிகை குஷ்பு

________________________________

பட்ஜெட்டில் தள்ளுபடிக்கான நிதி ஒதுக்கப்படாத நிலையில், சுய உதவிக்குழு கடன் ரத்து, நகைக் கடன்கள் ரத்து என்பது எப்படி சாத்தியமாகும். தேர்தலுக்காக அறிவிக்கப்பட்ட வெற்று வாக்குறுதிகள் இவை.

- காங்., முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம்

________________________________


பா.ஜ., குடும்ப கட்சியல்ல. பெண்கள், இளைஞர் என, எல்லாருக்குமான கட்சி. நடிகை குஷ்புவை, எங்கள் கட்சி என்றுமே கைவிடாது. அவருக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ அதை கொடுக்கும்.

- பா.ஜ., மகளிரணி தேசியச் தலைவர் வானதி சீனிவாசன்

_________________________________

இன்று மற்றும் நாளை, வங்கி ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ள, நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிக்கிறது. எங்களைப் போல மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

- மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன்

_____________________________

ஜெனீவா நகரில் நடைபெறும், ஐ.நா., மனித உரிமைகள் சபையில், இலங்கையில், 2009ல் நிகழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு எதிராக கொடுமைகளை விவாதிக்க, அவர்களுக்கு தக்க நிவாரணம் கிடைக்க இந்தியா நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ

___________________________

மாற்றுத்திறனாளிகள் ஓட்டுச்சாவடிக்கு சென்று எளிதாக ஓட்டளிக்க தேவையான வசதிகளை செய்து தர, தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது. எனவே, தபால் ஓட்டுகள் போடுவதை கைவிட்டு, ஓட்டுச்சாவடிக்கு சென்று ஓட்டளிக்க, மாற்றுத்திறனாளிகள் தயாராக வேண்டும்.

- மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தங்கம்

______________________