இன்று ஒரு தகவல்


நித்தியகல்யாணி பூச்செடி என்றாலே பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும் அதன் மணம் பிறரை அருகில் செல்ல விடாமல் முகம் சுளிக்கும் வண்ணமாக இருக்கும். 

இதன் காரணமாக வெவ்வேறு பெயர்களாலும் அடைமொழி கொடுக்கப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் தானாகவே வளரக்கூடிய இந்த நித்தியகல்யாணி செடி எவ்வளவு நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்துள்ளது என்பது குறித்து நமக்கே தெரிவதில்லை. அவற்றை குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

நித்திய கல்யாணி ஐந்து இதழ் களையுடைய வெண்மை அல்லது இளஞ்சிவப்பு நிற மலர்களையும் மாற்றடுக்கில் அமைந்த இலைகளையும் உடைய குறுஞ்செடியாகும். இதன் இலை கசப்பாக இருப்பதால் ஆடுமாடுகள் இதனை உட்கொள்வதில்லை. 

நித்தியகல்யாணியின் நன்மைகள்

இந்த நித்தியகல்யாணி எனும் முழுத்தாவரமும் மருத்துவப்பயன் கொண்டதாக தான் இருக்கிறது. இதன் வேர், இலை, பூ ஆகிய அனைத்துமே மருத்துவத்தில் மிகவும் பயன் கொண்டதாக இருக்கிறது.

இதனை சுடுகாட்டுப் பூ, கல்லறைப் பூ, என பல பெயர்களில் அழைக்கின்றனர். நித்திய கல்யாணியின் இலைகள், பூ, தண்டு மற்றும் வேர்கள் மருத்துவ பயன் கொண்டவை.
 
இரத்த அழுத்தம், மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும். மாதவிடாயின் போது ஏற்படும் நோய்கள் குணமடையும். நித்தியக் கல்யாணி நாடியைச் சமப்படுத்தவும், சிறுநீர் சர்க்கரையைக் குறைக்கவும் மருந்தாகப் பயன்படுத்தலாம். மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தயாரிப்பில் பயன் படுத்தப்படுகிறது.
 
புற்றுநோய்
 
நாவல் நிறம் அல்லது வெள்ளை நிறத்தில் அதிகம் காணப்பட கூடிய இந்த தாவரத்தின் பூக்கள் வெள்ளை அணுக்களின் அதிகரிப்பால் ஏற்படக்கூடிய இரத்த புற்றுநோயை எதிர்க்கக்கூடிய மருத்துவத் தன்மை கொண்டது. 

இது போன்ற ஒரு மிகச்சிறந்த ரத்தப் புற்றுநோயை எதிர்க்கக்கூடிய மருத்துவ பயன் கொண்ட தாவரம் இல்லை என்றே கூறலாம். 

இதில் உள்ள 100 ஆல்கலாய்டுகளும் ஏறக்குறைய மருந்துகள்தான். அவற்றில் வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் ஆகியவை புற்றுநோய்க்கு மருந்தாகும். இத்தாவரம் மருத்துவத் துறையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது. குறைந்த ரத்த அழுத்தம், ரத்த அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும். பக்கவிளைவை ஏற்படுத்தாத மருந்துத் தாவரமாகும்.

சிறுநீரகநோய்


சிறுநீர் கற்களை அழிக்க உதவுவதுடன், சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் தீர்வு அளிக்க உதவுகிறது. உடல் அசதிக்கு இனி மருந்து வாங்கி குடிக்க தேவையில்லை.
 
நீரிழிவுநோய்
 
நித்யகல்யாணியின் ஐந்தாறு பூக்களை அரை லிட்டர் நீரில் போட்டுக் காய்ச்சி கால் லிட்டராக்கி 1 நாளைக்கு 4 வேளை கொடுக்க அதிக தாகம், அதிக சிறுநீர்போக்கு அதனால் ஏற்படும் உடல் பலவீனம் சரியாகும். அதிக பசி என்றாலும், பசியின்மையும் தீரும்.
 
சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் இதன் வேர்ச்சூரணத்தை 1 சிட்டிகை எடுத்து வெந்நீரில் கலந்து 2, 3 முறை உட்கொண்டால் சிறுநீர் சர்க்கரை குறைந்து நோய் கட்டுப்படும்.
 
நீரிழிவுக்கு இதன் வேர்ப்பொடியை தினசரி அரை டீஸ்பூன் வெந்நீரில் சாப்பிட்டு வர வேண்டும். மலரை கஷாயம் போட்டு குடிக்க பசியின்மை, அதிக பசி, அதிக தாகம், அதிமூத்திரம் போன்றவை குணமாகும்.

இந்த நித்தியகல்யாணி தாவரத்தில் உள்ள பூக்களை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு பாதியாக வற்றும் வரை விட்டுக் குடித்து வந்தாலே உடல் களைப்பு அனைத்தும் நீங்கிவிடும்.

நாள்பட்ட புண் மற்றும் ஆழமான புண்களுக்கு கூட நித்தியகல்யாணி செடியின் இலைகள் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து தைலம் போல காய்ச்சி பூசி வரும் பொழுது நிச்சயம் அது முழுமையாக குணமடையும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.

நன்றி. 

மோகனா செல்வராஜ்