இன்றைய ராசிபலன்

             _*இன்றைய ராசிபலன் 31.03.2021


மேஷம்


மேஷம்: எதையும் தன்னம்பிக்கையுடன் செய்ய தொடங்குவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். கல்யாணப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.


ரிஷபம்


ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும்.  உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.


மிதுனம்


மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். புது தொழில் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.


கடகம்


கடகம்: பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும் வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில்  சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். தடைகளை தாண்டி வெல்லும்நாள்.


சிம்மம்


சிம்மம்: சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் சுமூக தீர்வு காண்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெருகும். வெற்றி பெறும் நாள்.


கன்னி

கன்னி: கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அழகும் இளமையும் கூடும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்தியோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய மாற்றம் ஏற்படும் நாள்.


துலாம்


துலாம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல் ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்து போவது நல்லது. இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்


விருச்சிகம்: குடும்பத்துடன் விவாதங்கள் வந்து போகும். பழைய கடன் பிரச்சினை அவ்வப்போது மனதை வாட்டும். உடன் பிறந்தவர்களுடன் வீண் விவாதம் வந்து போகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில்  சக ஊழியர்களால் நிம்மதியை இழப்பீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


தனுசு


தனுசு: குடும்பத்தினரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். புகழ் கௌரவம்கூடும் நாள்.


மகரம்


மகரம்: சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி கொள்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி வியப்பார். சாதிக்கும் நாள்.


கும்பம்


கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். கை மாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித்தருவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பாதை தெரியும் நாள்.


மீனம்


மீனம்: சந்திராஷ்டமம் இருப்பதால் பல மறைமுக விமர்சனங்களும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும். வியாபாரத்தில் ரகசியங்களை மற்றவர்களிடம்  வெளியிட வேண்டாம். உத்தியோகத்தில் சகஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்...