21 தொகுதிகளுக்கு காங். வேட்பாளர் பட்டியல் வெளியீடு; திருநாவுக்கரசர், இளங்கோவன் மகன்களுக்கு வாய்ப்பு

 


திமுக கூட்டணியில் காங்கிரஸ் தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டன.


இந்த நிலையில் காங்கிரசும் 21 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை இன்று இரவு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி பொன்னேரி- துரை சந்திரசேகர். ஸ்ரீபெரும்புதூர்- செல்வபெருந்தகை, சோளிங்கர்- முனிரத்தினம், ஊத்தங்கரை- ஆறுமுகம், கள்ளக்குறிச்சி- மணிரத்தினம், ஒமலூர்- மோகன் குமாரமங்கலம், 

ஈரோடு கிழக்கு- ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் திருமுகன் ஈவேரா
உதகமண்டலம்- கணேஷ், கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார், உடுமலைப்பேட்டை- தென்னரசு, விருத்தாசலம்- ராதாகிருஷ்ணன்,

அறந்தாங்கி- திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், 

காரைக்குடி- மான்குடி, மேலூர்- ரவிசந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர்- மாதவ ராவ், சிவகாசி- அசோகன், திருவாடனை- கருமாணிக்கம், ஸ்ரீவைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ், தென்காசி- பழனி நாடார், நாங்குநேரி- ரூபி மனோகரன், கிள்ளியூர்- ராஜேஷ்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர். விளவங்கோடு, வேளச்சேரி, குளச்சல், மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. 

இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் விஜய்வசந்த போட்டியிடுகிறார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.