வரும் 12ம் தேதி அமமுக பொதுக்கூட்டம்- தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார் டிடிவி தினகரன்

 


வரும் 12ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தேர்தல் அறிக்கையை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிடுவார் என அறிக்கை.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக கட்சி அலுவலகத்தில் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில், விருப்ப மனு அளித்தவர்களிடம் இரண்டாவது நாளான இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. 

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறேன் என்றும் இன்னும் இரண்டு தினங்களில் அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அமமுக சார்பில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியீடு சிறப்பு பொதுக்கூட்டம் வரும் 12-ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை ராயப்பேட்டை YMCA மைதானத்தில் நடைபெற உள்ளது என்றும் அந்த பொதுக்கூட்டத்தில் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு சிறப்புரையாற்றுவார் எனவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.