பிப்ரவரி 27-ம் தேதி சனிக்கிழமை அனைத்து அரசு அலுவலங்களுக்கும் பணிநாளாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளதையடுத்து சனிக்கிழமை அரசு அலுவலங்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
*************************
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தக்குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். நிதித்துறை கூடுதல் செயலாளராக நந்தக்குமாரை நியமித்து தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார்.
***************************
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 15,332 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி திட்டத்தின் 35-வது நாளான இன்று, தமிழகத்தில் கோவிஷீல்டு தடுப்பூசி 14,917 பேருக்கும், கோவாக்ஸின் தடுப்பூசி 415 பேருக்கும் போட்டுக்கொண்டனர். இதுவரை மொத்தமாக 4,00,698 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
****************************
கடந்த 6 ஆண்டில் நாட்டில் வேலைவாய்ப்பு தரும் முதுகெலும்பு போன்ற அமைப்புகள் உடைக்கப்பட்டுள்ளன என்று ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
சிறுதொழில், நடுத்தர வணிகம், விவசாயிகள் போன்ற வேலை வழங்குவோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ராகுல்காந்தி குறிப்பிட்டுள்ளார்.
*****************************
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநில தேர்தல் தொடர்பாக இன்று தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த உள்ளது. தேர்தலுக்கான அட்டவணையை இறுதி செய்ய காலை 11 மணிக்கு தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்ததுகிறது.
*************************
மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி இன்று முதல் அதிமுகவில் விருப்பமனு விநியோகம் தொடங்குகிறது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்பமனு பெற்று பூர்த்தி செய்து தரலாம் என கூறப்பட்டுள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட விரும்புவோர் விருப்பமனு பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
*************************
விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு வரும் 26-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கு குறித்து தமிழக ஆளுநர் பதிலளிக்க உத்தரவிட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், ஆளுநர் சார்பில் மத்திய உள்துறை அமைச்சகம் உச்சநீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்தது. வருமங் 26-ம் தேதி வழக்கின் விசாரணையின்போது, ஜனாதிபதி சார்பில் மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
**************************
44-வது சென்னை புத்தக கண்காட்சியை இன்று காலை 9 மணிக்கு துணை முதல்வர் ஒபிஎஸ் தொடங்கி வைக்கிறார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிவாளர் சங்கம் சார்பில் YMCA மைதானத்தில் மார்ச் 9 வரை புத்தக கண்காட்சி நடைபெற உள்ளது. 6 லட்சம் தலைப்புகளில் சுமார் 500 பதிப்பகங்களின் புத்தகங்கள் 700 அரங்குகளில் விற்பனை செய்யப்பட உள்ளன.
**************************
உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24.94 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 2,494,822 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 112,625,021 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 88,209,395 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 92,370 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
************************