வண்ணாரப்பேட்டை விம்கோ மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

 


       14-02-2021 அன்று    சென்னை வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ வரையிலான மெட்ரோ ரயில் சேவையை தொடக்கம்

 மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்

சென்னையில் வண்ணாரப்பேட்டை - திருவொற்றியூர் இடையே முதல்கட்ட மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டப் பணிகள்ரூ.3,700 கோடியில் மேற்கொள்ளப்பட்டன. 


           ரயில் சேவையை மேலும் 9 கிலோ மீட்டர் தூரம் அதிகரித்து, திருவொற்றியூர் விம்கோ நகர் வரை  பாதை நீட்டிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இந்த வழித்தடத்தில் தியாகராயா கல்லூரி, கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, டோல்கேட், தாங்கல், கவுரி ஆஷ்ரம், திருவொற்றியூர், விம்கோ நகர் உள்பட 8 மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டு வந்தன. இதற்கான பணிகள் விரைவாக நடைபெறுகிறது.

பிரதமர் சென்னையில் வருகையையொட்டி சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னையில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்


     நேரு உள் விளையாட்டரங்கில்  வண்ணாரப்பேட்டை விம்கோ மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைக்கிறார் 

இதில் கல்லணை கால்வாய் புதுப்பிக்கும் திட்டத்திற்கும் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார்.