தமிழக்தை அச்சுறுத்தும் உருமாறிய கொரோனா

 
தமிழகத்தில், குறைவான நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளது ஆறுதல் அளித்தாலும், அண்டை மாநிலங்களில் பரவும் புதிய வகை கொரோனாவால், சற்று அச்சம் ஏற்படுகிறது.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், புதிதாக பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸ் பல இடங்களில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. 

அந்த வகையில், இந்தியாவில், கேரளா, பஞ்சாப், மஹாராஷ்டிரா,  மத்திய பிரதேசம் மற்றும் சட்டிஸ்கர்   மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸால் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த பாதிப்பு தமிழகத்தில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய சுகாதார செயலர் ராதாரகிருஷ்ணன் அவர்கள், தமிழகத்தில், குறைவான நபர்கள் மட்டுமே மருத்துவமனையில் உள்ளது ஆறுதல் அளித்தாலும், அண்டை மாநிலங்களில் பரவும் புதிய வகை கொரோனாவால், சற்று அச்சம் ஏற்படுவதாக கூறியுள்ளார். 

கேரளா, மகாராஷ்டிராவில் இருந்து வருபர்களுக்கு 7 நாட்கள் வீட்டு தனிமை கட்டாயம் என புதிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அனைவருக்கும் கொரோனா சோதனை கட்டாயம் என கூறியுள்ளது.

மேலும், அண்டை மாநிலங்களில் நிலை தமிழகத்தில் ஏற்படாமல் இருக்க,  அரசின் விதிமுறைகளை கையாளுமாறு மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.