செய்திகள்

 

தமிழகத்தில் 30 துணை ஆட்சியர்கள் நிலையில் உள்ள அதிகாரிகள் பணியிடமாறுதல் மற்றும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். காலியாக இருந்த பணியிடங்களில் துணை ஆட்சியர்களை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

***********************

பிரதமர் வருகையையொட்டி இன்று காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மாநகர பேருந்துகள், பொதுமக்களின் வாகனங்கள் 5 மணி நேரம் திருப்பி விடப்படுகின்றன. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் வர அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****************************

கல்லூரி கல்வி இயக்குநராக பூரணச்சந்திரனை மீண்டும் தமிழக அரசு நியமித்துள்ளது. 2 மாதத்திற்கு முன்பு பூரணச்சந்திரன் பதவியை நீதிமன்றம் ரத்து செய்திருந்த நிலையில் மீண்டும் நியமிக்கப் பட்டுள்ளார்.

************************

அதிமுகவின் அம்மா பேரவை இணைச் செயலாளராக வா.புகழேந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது. மேலும், அதிமுக செய்தித் தொடர்பாளராக ரவீந்திர ஜெயனை நியமித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

******************************

மக்கள் நீதி மய்யத்தின் மாநில மாநாடு பிப்ரவரி 21ம் தேதிக்கு பதில் மார்ச் 7ம் தேதியில் மண்ணிவாக்கத்தில் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். காவல்துறை அனுமதி தாமதிக்கப்படுவதால் வேறு வழியின்றி மாநாடு நிகழ்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

************************

பட்டாசு ஆலைகளில் விபத்தை தவிர்க்க வேண்டும் என்றால் அதன் விற்பனையை தடை செய்ய வேண்டும் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார். உயிரிழப்புகளை தடுக்க பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பதை தவிர வேறு வழி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

***************************

 நில அபகரிப்பு செயலில் ஈடுபடும் கட்சி தொண்டர்களை அக்கட்சி தலைவர்கள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. கட்டுப்படுத்த தவறினால் கட்சியின் நற்பெயரில் தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என வீடு விற்பனை செய்யும் தனது தொழிலை தடுப்பதாகவும் நடவடிக்கை கோரி தொடரப்பட்ட வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*************************

பணப்பட்டுவாடா நடந்ததால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை ரத்து செய்தோம் என தலைமை தேர்தலை ரத்து செய்தோம் என தலைமை தேர்தல் ஆணையர் கூறினார். தேர்தலில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படவில்லை என்றால் அது எப்படி பெருமைப்பட கூடிய நடவடிக்கையாகும் என்று ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். வாய்ச்சொல் வீரர்கள் என்று தன் மீது உள்ள பழி உண்மையல்ல என்பதை சட்டமன்ற தேர்தலில் ஆணையம் நிரூபிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

***********************************