அதிமுகதான் பாஜகவின் “பி” டீம் – கனிமொழி விமர்சனம்

 


மதுரையில் திமுக மாநில மகளிரணி செயலாளர் கனிமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, அதிமுகவின் அனைத்து அறிக்கைகளும் வெற்று அறிக்கையாக இருந்துள்ளது. 

அதேபோல தான் வங்கி கடன் அறிக்கையும் வெற்று அறிக்கையாகவே இருக்கும்.

திமுகவில் கூட்டணி தொடரும். மாற்றங்கள் இருந்தால் திமுக தலைமை முடிவு எடுக்கும். 

அழகிரி குறித்து கருணாநிதி எடுத்த நிலைப்பாடுதான். தற்போது வேறு முடிவு எடுக்கவேண்டிய நிலை இருந்தால் அதை திமுக தலைவர் எடுப்பார் என  கூறினார்.

அப்போது, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவிற்கு ஸ்டாலினுக்கும் உடன்பாடு ஏற்பட்டுவிட்டது. 

திமுகவின் “பி” டீம் தான் சசிகலாவும், டிடிவி தினகரனும் என தெரிவித்தார். 

இதுகுறித்து மாநில மகளிரணி செயலாளர் கனிமொழியிடம் கேட்டபோது, திமுகவிற்கு எந்த பி டீம் தேவையில்லை. அதிமுக பாரதிய ஜனதா கட்சியின் பி டீமாக செயல்பட்டு வருகிறது என தெரிவித்தார்