எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் கீழ்த்தர அரசியலை முன்னெடுக்கிறது பாஜ

 


இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகமான தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது: 

மதுரை மாநகரில் 18.02.2021 இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அளவிலான மாநாடு நடைபெற உள்ளது. 

இந்த மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட திமுக தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல்களிலும் பாஜ படுதோல்வியை சந்திக்கும். இந்த தேர்தல் முடிவு பாஜ ஆட்சியின் வீழ்ச்சியின் தொடக்கமாக அமையும். 

இந்தியாவில் அதிகம் பணபலம் கொண்ட கட்சி பாஜக. பணத்தை வைத்து எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்கும் கீழ்த்தர அரசியலை முன்னெடுக்கிறது. 

புதுச்சேரியிலும் அதை தான் அரங்கேற்ற முயல்கின்றனர். இவ்வாறு டி.ராஜா கூறினார்.