மருத்துவ குறிப்பு



இடுப்பு பகுதியில் ஏற்படும் கருமையை போக்க இதை பயன்படுத்துங்க போதும் !!

பெண்கள் மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் இடுப்பு பகுதியில் ஏற்படும் கருமையை இயற்கை வழிமுறைகளை பின்பற்றி போக்க முடியும்.

மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால், பிரேஸியரின் ஸ்ட்ராப் எனப்படும் பட்டை, தோள்களில் அழுந்தப் பதிந்து கருமையும், நாளடைவில் புண்ணாக மாறி  தழும்பும் ஏற்பட வாய்ப்புள்ளது. 

இதற்கு உள்ளாடை விற்கும் கடைகளில் கிடைக்கக்கூடிய ஸ்ட்ராப் குஷனை வாங்கிப் பொருத்திக்கொள்ளலாம். 

தவிர, குளிக்கும் முன், ஒரு நாள் விட்டு ஒரு நாள்  ஒரு ஸ்பூன் அரிசி மாவுடன் சிறிதளவு பால் கலந்து கருமை படிந்த இடத்தில் தேய்த்துக் கழுவவும். இது இறந்த செல்களை நீக்கும். பின்னர் பால் ஏடு அல்லது  வெண்ணெயைக் கொண்டு கருமை படர்ந்த இடத்தில் தேய்த்து மசாஜ் கொடுக்கவும். நாளடைவில் கருமை மறைந்துவிடும்.

 புடவையோ, சுடிதாரோ இடுப்பை இறுக்கிப் பிடிப்பதுபோல அணிவதால் அங்கு கருமை படிந்துவிடும். 

அதைப் போக்க தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், பாதாம்  எண்ணெய் சிறிதளவு எடுத்து கருமை படிந்த சருமத்தில் 10 நிமிடங்கள் மசாஜ் செய்யவும். 

பின்னர், ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதனுடன் இரண்டு ஸ்பூன்  சர்க்கரை சேர்த்து இடுப்பைச் சுற்றித் தடவி, மசாஜ் செய்யவேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் போய்விடும். 

 அடுத்ததாக, இரண்டு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் கடலை மாவு கலந்து பேக் போடவும். காய்ந்தவுடன் அதைக் கழுவி, மாய்ஸ்ச்சரைஸர் அப்ளை செய்யவும். 

இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தொடர்ந்து செய்யும்போது கருமை மறைந்துவிடும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.

நன்றி. 

மோகனா செல்வராஜ்