திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி.
கொரோனா அச்சுறுத்தலால் பல மாதங்களாக கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது தொற்று குறைந்து வருவதால், அரசு பல தளர்வுகளை அறிவித்துள்ளது. அதன்படி, தற்போது, 9 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்த 3 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 3 மாணவிகளும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.