செய்திகள்

 


        நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறை அமலுக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாதவர்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் நடத்தி வருகின்றனர். பாஸ்டேக் முறைக்கு மாறுவதற்கான அவகாசம் நள்ளிரவுடன் முடிந்தது.


**********************

குரூப்-1 முதல்நிலை தேர்வில் தற்காலிகமாக தேர்வான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்களை மார்ச் 15-ந்தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

***********************

ஆண்-பெண் மட்டுமின்றி மூன்றாம் பாலினத்தவருக்கும் சமவேலை, சமஊதியம் கிடைக்கவேண்டும் என்பதே தமிழக அரசின் விருப்பம். மூன்றாம் பாலினத்தவர் மீதான தவறான பார்வையை மாற்றி சமுதாயத்தில் அவர்களுக்கு மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தருவதில் அம்மாவின் அரசு என்றும் துணைநிற்கும்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

புதிதாக தொடங்கப்பட்டுள்ள புதிய வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 13 திருநங்கை சகோதரிகளின் பணி சிறக்க எனது நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.

********************************

மத்திய தொலைத்தொடர்பு துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் மூத்த அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

இதில் குறிப்பாக தொலைத்தொடர்பு துறையில் நிதி மோசடிகளை விசாரிக்க டிஜிட்டல் புலனாய்வு பிரிவு அமைப்பது குறித்து முடிவு செய்யப்பட்டது.

இதைப்போல தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களுக்கு தொல்லை கொடுப்பதை நிறுத்த கடும் நடவடிக்கை எடுக்குமாறும் அதிகாரிகளுக்கு மந்திரி உத்தரவிட்டார்

*************************