படமாகும் கவிஞர் வைரமுத்துவின் வாழ்க்கை

கவிஞர் வைரமுத்துவின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படமொன்று உருவாக்கப்பட உள்ளதாகவும் ,அதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய திரையுலகில் தற்போது பலரின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் உருவாகி வெற்றி பெற்று வருகிறது.

சமீபத்தில் கூட சூர்யா நடிப்பில் வெளியான சூரரை போற்று திரைப்படம் ஜிஆர் கோபிநாத் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகும்.

அது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டடித்தது .மேலும் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

அதே போன்று விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் மாதவன் நடித்து வருகிறார்.இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியரான கவிஞர் வைரமுத்து அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு படமொன்று உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

                                     


பல தேசிய விருதுகளை வென்று இன்றும் பல படங்களில் வரிகள் எழுதி வரும் இவரது வாழ்க்கையை படமாக்க பிரபல இயக்குனர் ஒருவர் கதை எழுதி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

அந்த படத்தில் வைரமுத்து வேடத்தில் விஜய் சேதுபதி நடித்தால் நன்றாக இருக்கும் என்று வைரமுத்து அவர்களே தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. உண்மையெனில் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.