முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் படப்பை -கரசங்கால் பகுதியில் நடைபெறும் “உங்கள் தொகுதி ஸ்டாலின் நிகழ்ச்சியில்” பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று சட்டமன்றத்தில் அறிவித்த வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீட்டை நாமதான் செயல்படுத்தனும்.
உள்ஒதுக்கீடு வெறும் அறிவிப்புதான்; முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் அரசாணை கூட வெளியிட முடியாது. வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீட்டை திமுக ஆட்சிக்கு வந்ததும் அமல்படுத்தும்.
தமிழகம் முழுவதும் எப்படி தூர்வாரியிருப்பார்கள்..? அரசு கஜானாவை தான் அதிமுகவினர் தூர்வாரி உள்ளனர் என கூறினார்.
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளார்.
உள் இட ஒதுக்கீடு மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். சீர்மரபினருக்கு 7%, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.