வரலாறு - இன்று உலக தாய்மொழி தினம்.

 


வரலாறு : தமிழ் உயிருக்கு நேர்... இன்று உலக தாய்மொழி தினம்...!!

உலக தாய்மொழி தினம்

🌹 ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. 

🌹 ஒவ்வொரு மொழிக்கும் அந்த மொழிக்கே உரிய சிறப்புத் தன்மைகள் உண்டு. ஒவ்வொரு இனக் குழுவிற்கும் அடையாளமாக இருப்பது அவர்களின் தாய்மொழி. தாய்மொழிகளின் சிறப்பையும், அவசியத்தையும் எடுத்துணர்த்த, ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ம் நாள் உலக தாய்மொழிகள் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

🌹தாய் மொழியினைக் கற்றுக் கொள்வது இயல்பான, எளிமையான செயல். தாய் மொழியினைக் கற்றுக் கொள்ளாமல் ஓர் அயல் மொழியினையோ, குடியேற்ற மொழிகளையோ கற்றுக் கொள்ள முயற்சிகள் தேவை.

🌹ஒவ்வொரு மொழிக்கும் சில தனித்தன்மைகள் உண்டு, அது அனைத்தையும் பிற மொழிகளில் மொழி பெயர்த்துவிட முடியாது. உதாரணமாக , தமிழில் 'மனம் குளிர வரவேற்கிறோம்' என்ற சொற்றொடரை ஆங்கிலத்தில் 'Warm Welcome' என்று மொழிபெயர்க்கும்போது அதன் பொருளே மாறுபட்டு விடும்.

🌹எழுத்தறிவிற்கு தாய்மொழிக்கல்வி மிக அவசியம். ஆப்பிரிக்க நாடான கானாவில் நடைபெற்ற ஓர் ஆய்வில், பிறமொழிக் கல்வியினை கற்றவர்களைவிட, தாய்மொழிக் கல்வியினைக் கற்றவர்களுக்கு 40 சதவீதம் எழுத்தறிவுத்திறன் அதிகமாக இருக்கின்றது என்பது உறுதியாகி இருக்கின்றது 

🌹அமெரிக்காவில் பர்க்கெலி கலிபோர்னியா பல்கலையின் தமிழ்ப்பீடப் பேராசிரியராக இருந்த ஜார்ஜ் ஹார்ட், இந்தியாவில் இருந்து ஆங்கில வழிகல்வி அல்லது பிற மொழி கல்வியினை மட்டும் கற்றுக் கொண்டு அமெரிக்கா வருகிறவர்களால் ஆங்கிலத்திலும் , ஆங்கிலத்தை தாய் மொழியாக கொண்டவர்கள் போல புலமையுடன் இருக்க முடிவதில்லை.

🌹அவர்கள் தாய்மொழிக் கல்வியினை புறக்கணித்ததால் அவர்களின் தாய்மொழியிலும் புலமை பெற்றவர்களாக இல்லை. அவர்களால் எந்த மொழியிலும் துல்லியமான சொற்களைக் கொண்டு தங்களுடைய கருத்துகளை ஆழமாக சொல்ல முடிவதில்லை .

🌹இது நமக்கு பேரிழப்பு. இலக்கியமாகட்டும், அன்றாட வாழ்வியலாக இருக்கட்டும், அரசியலாக இருக்கட்டும், அறிவியலாக இருக்கட்டும், துல்லியமாக பேச, எழுத, கேட்டு புரிந்துகொள்ள திறமை உடையவர்களாக இருத்தல் அவசியம்.

🌹தமிழ் மொழியின் சிறப்பு பற்றி கூற வேண்டுமெனில் ஈழத்து தமிழறிஞர் கா.சிவத்தம்பி , "தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது," என்பார். ஆகவே, தமிழ் மொழியின் மேன்மை அதன் தொன்மையிலும், தொடர்ச்சியிலும் இருக்கின்றது.

🌹 உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்துவிட்டன. எனவே, அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும், அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.

🌹 திருக்குறளில் உள்ள சொற்கள் பல, நம்முடைய இன்றைய வாழும் மொழியிலும் இருக்கின்றது. இந்த அளவிற்கு தொடர்ச்சியான மரபுடைய மொழிகள் உலகத்தில் இல்லவே இல்லை என்று சொல்லலாம்.

                                   


வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க!
நன்மை வந்தெய்துக! தீதெலாம் நலிக!
அறம் வளர்ந்திடுக! மறம் மடிவுறுக!

ஆரிய நாட்டினர் ஆண்மையோடியற்றும்
சீரிய முயற்சிகள் சிறந்துமிக் கோங்குக!
நந்தேயத்தினர் நாடொறும் உயர்க!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் வாழிய வாழ்கவே

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் பயணம் தொடரும்.

நன்றி. 

மோகனா செல்வராஜ்