சமையல் குறிப்பு

 


👉 துவரம் பருப்புடன் இரண்டு பு சணி துண்டுகள் அல்லது சர்க்கரை வள்ளிக் கிழங்கு துண்டுகளை சேர்த்து வேக வைத்து, மசித்து, சாம்பாரில் சேர்த்தால் ருசியாக இருக்கும். துவரம்பருப்பின் அளவையும் குறைத்துக் கொள்ளலாம்.

👉 காய்கறி சாலட் செய்யும் போது ஒரு கப் பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து சாலட்டில் போட்டால் சுவையாகவும்,                             சுப்பராகவும் இருக்கும்.

👉 அதிக அளவு பாலாடை வேண்டும் என்றால் கொதித்து ஆறிய பாலை மூடாமல் ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டால் சிறிது நேரத்திலேயே அதிக அளவு பாலாடை தோன்றிவிடும்.

👉 குருமா செய்யும்போது, தேங்காயின் அளவை குறைத்து பாதாம் பருப்பை சேர்த்து அரைத்தால் சத்து அதிகரிக்கும். குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் உதவும்.

👉 பருப்பு ரசம் செய்யும் போது இரண்டு பச்சை மிளகாயை நீள வாக்கில் வெட்டி, ரசம் நுரைத்து வரும் போது போட்டால் ரசம் சுவையாகவும், சூப்பராகவும் இருக்கும்.

👉 எண்ணெயில் வறுத்த அல்லது பொரித்த உணவுகளை அடுப்பிலிருந்து எடுத்தவுடன் மூடக்கூடாது. அவ்வாறு செய்தால் உணவுப் பண்டங்கள் நமர்த்துவிடும்.

👉 சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விட்டால் சாம்பாரில் உப்பு குறைந்து விடும்.

👉 அப்பளம், வடகம் போன்றவற்றை வெயிலில் காய வைத்து பொரித்தால் அதிக எண்ணெய் இழுக்காது. மொறுமொறுப்பாக இருக்கும்.

👉 கேரட்டை தோல் சீவி, ஐந்து நிமிடங்கள் தண்ணீரில் போட்டு ஊற வைத்த பிறகு, எடுத்து துருவினால் கேரட் மிருதுவாகி, எளிதாக துருவ வரும்.

👉 டப்பாவில் வைத்த அப்பளம், வடகம் போன்றவை நொறுங்கி தூளாகிவிட்டால் அந்த துண்டுகளை எடுத்து பஜ்ஜி மாவில் போட்டு கலந்து பொரித்து எடுத்தால் ருசியும் நன்றாக இருக்கும். பொருட்களும் வீணாகாது.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள் குழுவின்  சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா