சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

 


கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், ஊடகங்கள் எந்தவொரு செய்தியை வெளியிடுவதாக இருந்தாலும், தலைமை கழகத்தை தொடர்புகொண்டு, அது உண்மையாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


தேர்தல் கூட்டணி குறித்து இனி என்னிடம் கேட்பதை விட, யார் இந்த கூட்டணிக்கு தலைமையோ (அதிமுக) அவர்களிடம் கேளுங்கள் என்றும்,அதிமுகவாக இருந்தாலும், திமுகவாக இருந்தாலும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றார்.

சசிகலாவை சந்திக்கும் திட்டம் ஏதும் இல்லையெனவும் தேமுதிக தனித்து போட்டியிட்டால் 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார் .

கூட்டணியில் எந்த குழப்பமோ, பிரச்சனையோ இல்லை, எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. 

தேர்தல் தேதியை அறிவித்தவுடன் நிச்சயமாக செயற்குழு, பொதுக்குழுவு கூட்டத்தில் கூட்டணி குறித்து நல்ல முடிவை கேப்டன் விஜயகாந்த் அறிவிப்பார் என்றும் தெரிவித்தார்.