சிவகாசி கருவாட்டுக் குழம்பு
மீன் குழம்பை விட அதிகம் விருப்பபட்டு சாப்பிடக் கூடியது கருவாட்டு குழம்பு தான்.
அதிலும், கருவாட்டு குழம்பு வைத்து மறுநாள் உண்டால் அதன் ருசியே தனி. சுவையான கருவாட்டு குழம்பு செய்வது பற்றி பார்க்கலாம்
கருவாடு உடல் உஷ்ணத்தை குறைக்கும். பொதுவாக அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து உஷ்ணம் வெளியேற கருவாட்டை சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
குச்சிக் (நெத்திலி) கருவாடு 100கிராம்
நெய்மீன் கருவாடு - 1 துண்டு
சாம்பார் வெங்காயம் 5
தக்காளி 2
புளி தேவையான அளவு
மஞ்சள் துாள் 1/2 TSP
சீரகத் துாள் 1 TSP
மிளகாய் துாள் தேவையான அளவு
பூண்டு 10
பச்சை மிளகாய் 4
செக்கு நல்லெண்ணெய்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய், உப்பு - தேவியான அளவு
செய்முறை
* நெத்திலி மீன் கருவாடை, அதில் ஒட்டியிருக்கும் மணல் போகும் அளவுக்கு நன்கு கழுவ வேண்டும். அதில், தண்ணீர் ஊற்றி, கால் மணி நேரம் ஊற வைக்கவும்.
* புளித் தண்ணீரை கரைத்து, அதில், உரித்த பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு, அடுப்பில் வைக்கவும். போதுமான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்.
* கொதிக்கும் போதே, மஞ்சள் துாள், மிளகாய்த் துாள், சீரகத் துாள், உப்பு போடவும்.
* கரண்டி போடாமல், சட்டியை எடுத்து, லேசாக சுற்றி விடவும். நன்கு கொதி வந்ததும், பச்சை வாசனை மாறாமல் இருக்கும் போதே, நல்லெண்ணெய் ஊற்றவும்.
* மசாலா நன்கு கொதித்து, லேசான கெட்டி பதத்திற்கு குழம்பு வரும் போது, ஊறப் போட்ட கருவாடை போடவும். கரண்டி போடாமல், சட்டியை பிடித்துமெதுவாக சுற்றினால், கருவாடு உடையாமல் வேகும். இதில் ஒரு துண்டு சுத்தம் செய்த, நெய் மீன் கருவாட்டுத் துண்டையும் போட்டு வேக விடவும்.
*நெய் மீன் போடுவதால், அதில் ஏற்கனவே உப்பு இருக்கும். எனவே, கவனத்துடன் உப்பு சேர்க்கவும்.
* எண்ணெய் பிரிந்து, குழம்பு வாசம் வந்தவுடன் , அடுப்பை அணைத்து விடவும்.
* சாதத்துடன் பிசைந்து சாப்பிட சூப்பராக இருக்கும். தவிர, கம்மஞ்சோறு, கேப்பக் கூழ், இட்லி, தோசைக்கு பிரமாதமாக மேட்ச் ஆகும்.
அதன் பின்னர் 5 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் ருசியான சிவகாசி கருவாட்டு குழம்பு தயார்.
இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் சமையல் பயணம் தொடரும்.
வணக்கம் அன்புடன் கார்த்திகா