இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


மாசி மகம் என்பது மாசிமாத பவுர்ணமியுடன் கூடி வரும் மக நட்சத்திர நாளில் இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு சிறப்பான நாள். 

வட இந்தியாவில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை 'கும்பமேளா' என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது இந்த மாசிமகம்.மாசிமகத் திருவிழாவிற்கும் கும்பகோணத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 

ஆண்டு தோறும் மாசி மக திருவிழா கொண்டாடப்பட்டாலும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணத்தில் கும்பேஸ்வரர் கோயிலில் கொண்டாடப்படும் மாசி மக விழாவிற்கு மகாமகம் என்று பெயர். 

தல வரலாறு

பிரளயம் வந்துதான் உலகம் அழியும் என்பது இயற்கையின் நியதி. அவ்வாறு பிரளய நேரம் வந்த போது பிரம்மா தனது சிருஷ்டி சக்தியை எல்லாம் ஒன்று திரட்டி அதை அமுதத்தில் கலந்து ஒரு குடத்திற்குள் (கும்பம்) இட்டு அதை பிரளயம் தாக்காதவாறு பாதுகாப்பாக இமயமலையின் உச்சியில் வைத்தார். 

ஆனால் கடல் பொங்கி ஏற்பட்ட பிரளயம் இமயம் உச்சிவரை சென்றது. அங்கே பிரம்மாவால் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த குடம் பிரளய நீரில் மிதந்து தெற்கு திசைக்கு வந்தது.அவ்வாறு வந்த குடம், பிரளய நீர் வடிந்ததும் ஓரிடத்தில் தரைதட்டி நின்றது. தரை தட்டிநின்ற குடத்தின் மீது அம்பை செலுத்தி அதை உடையச் செய்தார் சிவபெருமான். 

உடைந்த குடத்திலிருந்து அமுதம் கீழே கொட்டிச் சிதறியது. இந்த ஆமுதம் சிதறிய இடமே இன்று நாம் கும்பகோணம் என்றழைக்கும் 'குடமூக்கு' என்ற ஊர். 

அமுதத்தில் நனைந்த மணலால் ஒரு சிவலிங்கத்தை உருவாக்கி அதனுள் ஐக்கியமானார் சிவபெருமான். 


இவர் 'ஆதி கும்பேஸ்வரர்' என்ற பெயரில் இவ்விடத்தில் தங்கினார் என்பது புராணம்.

ஒரு பிரளய காலத்தின் போது, பிரம்மதேவன் மிதக்க விட்ட அமிர்தம் அடங்கிய குடத்தை, சிவபெருமான் அம்பு விட்டு உடைத்தார். இதையடுத்து அமிர்த குடம் உடைந்து, அதில் இருந்து அமிர்தம் சிதறியது. குடம் உருண்டு ஓடியது. 

அந்த குடம் நிலைபெற்று நின்ற இடம்தான் ‘கும்பகோணம்.’ சிதறிய அமிர்தம் ஒன்று சேர்ந்த இடமே கும்பகோணத்தில் உள்ள ‘மகாமக குளம்’ என்கிறார்கள்.

கும்பகோணம் மகாமகக் குளம், இந்தியாவில் தமிழ்நாட்டிலுள்ள, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவில் குளம் ஆகும். இது தமிழ் நாட்டில் உள்ள பெரிய கோவில் குளங்களில் முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.

ஒரு முறை புண்ணிய நதிகள் அனைத்தும், சிவபெருமானை சந்தித்தன. அந்த நதிகள் அனைத்தும் ஈசனிடம், “ஐயனே.. மக்கள் அனைவரும் எங்கள் நதிகளில் நீராடி அவர்களின் பாவங்களை எங்களிடமே விட்டுச் சென்று விடுகின்றனர். 

இந்த நாளில் யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி, போன்ற 12 நதிகள் கும்பகோணத்திற்கு வருவதாகவும் அவை கும்பகோண மகாமக குளத்தில் வந்து எழுந்தருளியிருப்பதாகவும் நம்பிக்கை.

இதனால் எங்களுக்கு பாவங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றது. எங்களிடம் வந்துசேரும் அந்த பாவங்களை, நாங்கள் எப்படி தொலைப்பது?” என்று கேட்டனர்.

அதற்கு சிவபெருமான், “நதிதேவிகளே.. கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்த குளத்தில், மாசி மகம் அன்று நீராடுங்கள். அதன் மூலம் உங்களை வந்தடைந்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்” என்றார். 

தையடுத்து கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, சரயு, வேகவதி, சிந்து, கோதாவரி, காவிரி, தபதி, பிரம்மபுத்திரா, தாமிரபரணி ஆகிய 12 நதிகள் கும்பகோணம் மகாமக குளத்தில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதீகம். 

பிற தலங்களில் செய்த பாவம் காசியில் தீரும். காசியில் செய்த பாவம் கும்பகோணத்தில் நீங்கும் என்பதே கும்பகோணத்தின் மகிமையாகும்.

எனவே மாசிமகத்தன்று இங்கு வந்து நீராடுபவர்களுக்கும், அவர்களை சேர்ந்த குடும்பத்தாருக்கும் புண்ணியம் கிடைக்கும் என புராணங்கள் கூறுகின்றன. 

மகாமக குளத்தில் நீராடி எழுந்ததும் 9 பெண்களுக்கு தாம்பூலம், பழம், தட்சணை, தேங்காய், குங்குமம், ரவிக்கைத்துணி கொடுப்பது சிறப்பான பலனை தரும்.

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்