செய்திகள்

 


கோவையில்  அடுத்தடுத்து 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெற்றோர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறுகையில்,  இறந்த குழந்தைகளுக்கு செலுத்தப்பட்டதாக கூறப்படும் தடுப்பூசியையும் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளோம்.

2 குழந்தைகள் இறந்ததாக எழுந்த புகார் தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. தற்போது அந்த 2 முகாம்களிலும் தற்காலிகமாக தடுப்பூசி செலுத்தும் பணியை நிறுத்தி வைத்துள்ளோம் என கூறினார்.

*********************

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு இருப்பதாகவும், கடிதத்தில் நியமன உறுப்பினர்களை பாஜக என்று  குறிப்பிட்டுள்ளார் என்றும், நியமன உறுப்பினர்களை பாஜகவினர் என்று சபாநாயகர் இதுவரை அங்கீகரிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, ஆளுநர் அளித்த கடிதத்தில் மிகப்பெரிய தவறு உள்ளது. இது பற்றி எனக்கு விளக்கம் தர ஆளுநருக்கு கடிதம் அனுப்பி உள்ளேன் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

*******************

கடந்த 5-ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர் தள்ளுபடி செய்யப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். இது விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட, கடன் தள்ளுபடி 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பிற்கு பல்வேறு தலைவர்களும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், கார்த்திக் சிதம்பரம் அவர்கள், ‘தமிழக அரசு அறிவித்துள்ள கூட்டுறவு வங்கிக் கடன் தள்ளுபடி சாத்தியமா? விவசாயிகள் பெற்ற கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்கிறதா? அல்லது கடன் தொகையை அரசே திரும்பி செலுத்துகிறதா? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

*****************************

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று கோவையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தேர்தல் வரும்போது மட்டும் வருவான் அல்ல நான் எந்த சூழ்நிலையிலும் உங்களோடு இருப்பவன் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

மேலும் ஸ்டாலின் கூறுகையில், பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்தால் விலை செஞ்சுரி அடிக்கும் என்றும், மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள கட்சிகள் மக்களை வாட்டி வதைக்கிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி வந்ததும் அனைத்து ஊர்களிலும்  அதிமுகவினர் ரவுடியிசத்தை ஒடுக்குவது தான் முதல் வேலை என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.