நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் - - பாஜகவில் இணைந்தார்

 


நடிகர் விஜயகுமார், நமீதா, கஸ்தூரி ராஜா, பொன்னம்பலம், ராதாரவி உள்ளிட்ட திரைத்துறை பிரபலங்கள் பலர் ஏற்கெனவே பாஜகவில் இணைந்திருக்கும் நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகனும் நடிகருமான ராம்குமார் தன்னை பாஜகவில் இணைத்துக் கொள்ள போவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நடிகர் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார், எல்.முருகன் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். 11.02.2021 சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்துக்கு வந்த ராம்குமார் கட்சியின் தலைவர் எல்.முருகனை நேரில் சந்தித்து பேசிய பின்னர் பாஜகவில் இணைந்தார்.

இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய ராம்குமார், நடிகர் சிவாஜி கணேசன் காங்கிரஸ் கட்சியை தழுவி இருந்தாலும், நான் தற்போது பிரதமர் மோடியின் ரசிகர் என்பதால் பாஜகவில் இணைக்கிறேன் என்று மாநில தலைவர் எல் முருகனின் கூறியுள்ளேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம்குமார் பாஜகவில் இணைவது குறித்து சிவாஜி ரசிகர் மன்றத் தலைவரும், காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவருமான சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், காங்கிரஸ் கட்சித் தலைவராக, காமராஜரின் சீடராக, பக்தராகக் கடைசி வரை வாழ்ந்து மறைந்த சிவாஜியின் புதல்வர், பாஜகவில் இணைவது எந்த வகையிலும் சிவாஜியின் புகழுக்குப் பெருமை சேர்க்காது என குறிப்பிட்டுள்ளார்.

**************************

சென்னை மயிலாப்பூர் தொகுதியில் காங்கிரஸ் நிர்வாகியாக இருந்து வந்த கராத்தே தியாகராஜன்  வரும் சட்டமனற்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டபோது, அதிமுக – பாஜக கூட்டணிக்கே தன்னுடைய ஆதரவு என்று தெரிவித்திருந்த நிலையில், தற்போது சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் எல் முருகன் மற்றும் மேலிட பொறுப்பாளர் சிடி ரவி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.