திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 17ம் தேதி
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களே சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் திமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 17 ம் தேதி விருப்பமனு அளிக்கலாம் என்று திமுக தெரிவித்திருந்தது.
***********************
அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களே சட்டமன்ற தேர்தல் வரவுள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரள சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வரும் 24ம் தேதி முதல் மார்ச் 5ம் தேதி வரை விருப்பமனு அளிக்கலாம் என்று அதிமுக தலைமை தெரிவித்திருந்தது.
***************************
விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று பாஜக மாநில தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல் முருகன், பாஜக – அதிமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் விரைவில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இரட்டை இலக்கத்தில் எங்கள் உறுப்பினர்கள் பேரவையில் இடம் பெறுவார்கள். அனைத்து மாவட்ட மக்களிடமும் கருத்து கேட்கப்பட்டு தேர்தல் அறிக்கையை தயாரித்து வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.
அதிமுகவை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் சார்பாகப் போட்டியிட பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*************************