தாய் மொழியில் பதவியேற்றதை எண்ணி பெருமிதம் - தமிழிசை சௌந்தரராஜன்

 


எனது தாய் மொழியில் பதவியேற்றத்தை எண்ணி பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த கிரண்பேடி, துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து, தெலுங்கானா ஆளுநராக பதவி வகித்து வரும் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தற்போது  ஆளுநராக பொறுப்பேற்று உள்ளார்.

புதுச்சேரி வரலாற்றிலேயே முதன்முறையாக தமிழில் பதவி பிரமாணம் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து, டாக்டர்.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘எனது தாய்மொழியில் பதவியேற்றத்தை எண்ணி பெருமிதம் மற்றும் மகிழ்ச்சி அடைகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.