அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர்


தற்போதைய துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் நிறைவடைய உள்ளதால் புதிய துணை வேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் தேர்வு செய்ய தேடல் குழு அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் தேடல் குழு உறுப்பினராக முன்னாள் துணை வேந்தர் தியாகராஜன் என்பவரை நியமனம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் பிற உறுப்பினர்கள் நியமிக்கப்பட்ட உடன் துணை வேந்தரை தேர்வு செய்யும் பணிகள் தொடங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தற்போதைய துணை வேந்தர் சூரப்பாவின் பதவிக்காலம் ஏப்ரலில் நிறைவடைய உள்ளதால் புதிய துணை வேந்தர் தேர்வு செய்யப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.