இன்று ஒரு ஆன்மிக தகவல்

 


ஏன் சனிக்கிழமையில்... இந்த பொருட்களையெல்லாம் வாங்கவே கூடாது?

சனிக்கிழமை இந்த பொருட்களையெல்லாம் வாங்கவே கூடாது!!

நவகிரகங்களில் மற்ற கிரகங்களை காட்டிலும் சனி பகவான் என்றால் அனைவரும் பயப்படுவார்கள். அதுமட்டுமின்றி மற்ற கிரகப்பெயர்ச்சி போல் இல்லாமல் நீண்ட காலம் ஒரே ராசியில் அமர்ந்து சுப மற்றும் அசுப பலன்களை தரக்கூடியவராக சனி இருப்பதால் சனி பகவானின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்தது என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

இந்திய சோதிடத்தின்படி, சனி பகவான் ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகள் தங்கி இருப்பார். ஒரு ராசியை விட்டு ஒரு ராசிக்கு கடந்து செல்வதை சனிப் பெயர்ச்சி என்பர்.

  • ஏழரைச் சனி
  • மங்கு சனி
  • பொங்கு சனி
  • தங்கு சனி
  • மரணச் சனி

எந்த ஒரு செயலும் நமது கர்மாவின்படியே நடக்கும் என்பது இந்து மதத்தின் அடிப்படை நம்பிக்கை. 


அதன்படி நிறைய விஷயங்கள் இந்த கிழமைகளில் இந்த நாட்களில் செய்ய வேண்டும். 


இந்த சமயத்தில் செய்யக் கூடாது என சொல்லப்பட்டு வருகிறது.

ஒரு சில விசயங்கள் தவறினாலும் , பெரும்பாலான விஷயங்கள் கச்சிதமாக நடக்கிறது. 


ஜோதிட சாஸ்திரங்களின் கணித்தபடி மழை, புயல், மோசமான நிகழ்வுகள் என எதுவுமே தவறியதில்லை. எப்படி இத்தனை துல்லியமாக கணிக்கமுடிகிறது என்று ஆச்சரியப்படுகிறோம்.


எது எப்படியோ ஜோதிடம் சொல்லும் சில விசயங்களை மூட நம்பிக்கை என கடந்து போக முடியாது. 


குறைந்த பட்சம் முன்னெச்செரிக்கையுடனாவது இருக்கலாம் இல்லையா. 


அவ்வாறு ஜோதிட சாஸ்திரத்தில் சனிக்கிழமை இந்த பொருட்களை எல்லாம் வாங்கக் கூடாது என சொல்லப்பட்டிருக்கிறது. அவை என்னவென்று பார்ப்போம்.

வாங்கக்கூடாத பொருட்கள் என்னென்ன?

🍚 சனிக்கிழமையன்று உப்பு வாங்கவே கூடாது... அவ்வாறு வாங்கினால் வியாபாரத்தில் நஷ்டம், பண விரயம் உண்டாகும். மேலும் அடிக்கடி நோய்வாய்ப்படவும் நேரிடும்.

📌 வீடு பெருக்கப் பயன்படும் துடைப்பத்தை சனிக்கிழமை வாங்குவது நல்லதல்ல.

✂ கத்திரிக்கோலை சனிக்கிழமையன்று வாங்குவது உகந்ததல்ல. இதனால் மோசமான சூழ்நிலையில் இருப்பவர்கள் இன்னும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

🍘 அரிசி மாவு, கோதுமை மாவு போன்ற மாவுப்பொருட்களையும் சனிக்கிழமைகளில் வாங்கக்கூடாது. இவைகள் மோசமான உடல்நிலையை குறிப்பதாகும்.

🌑 எள்ளை சனிக்கிழமையில் வாங்கக்கூடாது. இதனால் முடிக்க வேண்டிய காரியம் முடியாமல் தள்ளிப் போகும் அல்லது தடைபடும்.

🔧 இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமை வாங்கக்கூடாது. ஏனென்றால் இரும்பு பொருட்கள் சனிபகவானுக்கு ஆகாததால் அன்று வாங்கினால் துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும். அதேசமயம் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களை சனிக்கிழமையன்று தானமாக கொடுத்தால் மிகவும் நல்லது.

🍺 சனிக்கிழமையன்று எண்ணெய் வாங்கக்கூடாது. அவ்வாறு வாங்கினால் அடிக்கடி உடல் நலக்குறைவு உண்டாகும். ஆனால் எண்ணெயை தானமாக கொடுக்கலாம். அதுவும் கடுகு எண்ணெயில் செய்த அல்வா, நல்லெண்ணெயை தானம் செய்தால் மிகவும் சிறந்ததாகும்.

சனி காயத்ரி:  

காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி| தந்நோ மந்த: ப்ரசொதயாத்

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்