புதுச்சேரியில் நடக்கும் குழப்பத்திற்கு முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம்- முருகன்


முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம் என்று எல் முருகன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் பதவி ராஜினாமாவை தொடர்ந்து, தற்போது காங்கிரஸ் கூட்டணி பலம் 14 ஆகவும், எதிர்க்கட்சி கூட்டணி பலம் 14 ஆகவும் உள்ளது. இரு அணிகளுக்கு சமபலம் உள்ள நிலையில், வரும் 22ஆம் தேதி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து, புதுச்சேரியில் நியமன உறுப்பினர்களுக்கு வாக்கு உரிமை உள்ளதால் பெரும்பான்மை வாக்கெடுப்பின் போது, நிச்சியம் வாக்களிக்க உள்ளதாக பாஜக எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளார்கள். இதன் காரணமாக புதுச்சேரியில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிப்பாரா? அல்லது எதிர்க்கட்சி தலைமை தாங்குமா என்று குழப்பத்தில் உள்ளது.

இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் எல் முருகன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், பாஜகவுக்கு சம்பந்தம் இல்லை, புதுச்சேரியில் நடக்கும் அரசியல் குழப்பத்திற்கு அந்த மாநில முதலமைச்சர் நாராயணசாமி தான் காரணம் என்றும்  அதற்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், எந்த சம்பந்தமும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.