செய்திகள்

 


சமீப நாட்களாக பெட்ரோல்-டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. மக்கள் பயன்படுத்தக்கூடிய இந்த பொருட்களின் விலை அதிகரிப்பு, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு அரசியல் பிரபலங்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் இன்று கண்டன ஆர்பாட்டம்  நடைபெற உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன்படி, இன்று காலை 9 மணியளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

**************************

இந்தியாவின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளை பாதுகாப்பை உறுதி செய்கிறேன் என்றும், திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு எதிரான மூன்று பேரும் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியாகக் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், இதுதொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்ட தீர்மானங்கள் திருப்பி பெறப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

************************

திமுக, அதிமுக உட்பட இரண்டு கட்சிகளிலும் நல்லவர்கள் உள்ளனர். அவர்கள் நல்ல பணியை செய்துவிட்டு மரியாதை இல்லாமல் உள்ளனர். அவர்களை மக்கள் நீதி மையத்தில் சேர அறைகூவல் விடுகிறேன் என்றும், நல்லவர்களுக்காக மக்கள் நீதி மையத்தின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சீமான் சரத்குமார் எங்கள் அணிக்கு வரலாம். மக்களுக்கு நல்லது நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் எங்களது அணிக்கு வரலாம் என தெரிவித்துள்ளார்.

******************************

சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மக்களுக்கு நன்மை அளிக்கக் கூடிய பல நல்ல திட்டங்களை முதல்வர் பழனிசாமி அவர்கள் அறிவித்து வருகிறார். அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டணம் குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணம் ரூ.70 ஆக இருந்தது. முதல்வர் உத்தரவின்படி தற்போது ரூ.50 ஆக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

***************************