செய்திகள்

 


அழகர்கோயில் மலைமீதுள்ள நூபுர கங்கையில் புனித நீராட கோவில் நிர்வாகம் பக்த்தர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நூபுர கங்கையில் புனித நீராட பக்த்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் புனித நீராட கோயில் நிர்வாகம் அனுமதியளித்துள்ளது.

*********************************

ஸ்ரீவைகுண்டம் அருகே ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டார். கொற்கையில் ரோந்து பணியில் இருந்த போது குடிபோதையில் இருந்த நபரை எஸ்.ஐ. பாலு திட்டி கண்டித்துள்ளார். ஆத்திரமடைந்த நபர் சரக்கு வாகனத்தை எடுத்து வந்து எஸ்ஐ பாலுவை கொலை செய்து விட்டு தப்பியுள்ளார்.

************************************

கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,19,847 கோடி ஜிஎஸ்டி வசூலாகியுள்ளது என மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியை விட நடப்பாண்டு 8 சதவிகித ஜிஎஸ்டி கூடுதலாக வசூலாகி உள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

*******************************

துபாய் மற்றும் ஷர்ஜாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.2.17 கோடி மதிப்புள்ள தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கத்தை நூதன முறையில் பேஸ்ட்டாக மாற்றி கடத்தி வந்த திருச்சி,புதுக்கோட்டை, ராமநாதபுரத்தை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

*******************************

மயிலாப்பூரில் 30 கிலோ வெள்ளி பொருட்களுடன் கடை ஊழியர் சேட்டன் சிங் என்பவர் மாயமாகியுள்ளார். கடை உரிமையாளர் ரோஷன் குமார் அளித்த புகாரின் பேரில் மயிலாப்பூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

**********************************

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை105.84 அடியாக குறைந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.