சசிகலாவுக்கு கார் வழங்கியவர் உட்பட 7 நிர்வாகிகள் அதிரடி நீக்கம்

 


அதிமுக சசிகலாவுக்கு கார் வழங்கியவர், வரவேற்பு அளித்தவர்கள் என 7 நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கியது.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், சூளகிரி கிழக்கு ஒன்றியத்தை சேர்ந்த 6 நிர்வாகிகள், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் தட்சிணா மூர்த்தி ஆகியோர் அதிமுகவில் இருந்து 7 பேர் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் இருந்து நீக்கப்பட்டனர்.

அதில், தட்சிணா மூர்த்தி என்பவர் சசிகலா சென்னை வர கார் கொடுத்தவர். 08.02.2021 காலை பெங்களூரில் இருந்து காரில் புறப்பட்ட சசிகலா தமிழகம் எல்லையான ஓசூர் ஜூஜூ வாடி வழியாக வந்தார். 

அப்போது காரில் அதிமுக கொடியை அகற்ற வேண்டும் என்று காவல்துறை தரப்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டது. 

இதனால் அதிமுக உறுப்பினர் ஒருவரின் காரில் மாநில எல்லைக்குள் வந்து, அந்த காரில் சென்னை புறப்பட்டார்.

இந்த கார் யாருடையது என்று பலருக்கும் கேள்வி எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கார் யாருடையது என்று பலருக்கும் கேள்வி எழுந்தது. சசிகலா வந்த அதிமுக கொடி பொருத்தப்பட்ட கார் சூளகிரி அதிமுக ஒன்றிய கவுன்சிலர் சம்பங்கியின் கார் என்று தெரிய வந்தது. 

இதுகுறித்து சம்பங்கி செய்தியாளர்களிடம் கூறுகையில், சசிகலாவுக்கு அதிமுக சார்பாக வரவேற்பு அளித்தோம். அப்போது, சசிகலாவின் கார் பழுந்தடைந்தது. 

அதிமுக தொண்டனின் காரில் தமிழகம் செல்ல வேண்டும் என்று விரும்பியதால், அந்த காரை வழங்கினேன் என்று தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அதிமுக தலைமை என்ன முடிவு எடுத்தாலும் சரி, அம்மாவுக்கு ஒருதுணையாக இருக்கலாம் என்று செய்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.