தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி (27.02.2021)

 


காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று  வருகிறார். 

காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி 2-ம் கட்டமாக பிரச்சாரம் மேற்கொள்வதற்காக இன்று  வருகிறார்.  இதனையடுத்து, தனி விமானம் மூலம் தூத்துக்குடி, வாகைக்குளம் விமான நிலையத்திற்கு வருகிறார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் பல பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். பின் மாலை 4:30 மணியளவில், நாங்குநேரி நான்கு வழிச்சாலை பகுதியில் பிரச்சாரபொதுக்கூட்ட மேடையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக விமானம் மூலம் 27ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி வரும் அவர், வஉசி கல்லூரியில் வக்கீல்களை சந்தித்து கலந்துரையாடுகிறார். 

பின்னர் தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே ‘ரோடு ஷோ’ நடத்தி  பொதுமக்களிடம் ஆதரவு திரட்டுகிறார். 

பின்னர் தூத்துக்குடி புறநகர் பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் உப்பளத் தொழிலாளர்களை சந்தித்து உரையாடுகிறார். 

அங்கிருந்து ஸ்ரீவைகுண்டம் செல்லும் ராகுல்காந்தி மக்கள் மத்தியில் பேசுகிறார். 

பின்னர் சாத்தான்குளம், இட்டமொழி வழியாக மன்னார்புரம் விலக்கு சென்று பேசுகிறார். 

அங்கிருந்து பரப்பாடி வழியாக நெல்லை மாவட்டம் வருகிறார். நாங்குநேரி  டோல்கேட் அருகே காங்கிரஸ் மாநில பொருளாளர் நாங்குநேரி ரூபி மனோகரன் ஏற்பாடு செய்துள்ள காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். 

பொதுக்கூட்டம் முடிந்ததும் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில்  தங்குகிறார்.