இன்றைய ராசிபலன் 19-02-2021

மேஷம்

மேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு களைப்பு கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி திரும்பும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் தேங்கிக் கிடந்த பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்து போகும். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் விமர்சித்தாலும்  கலங்கிக்  கொண்டு இருக்காதீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து நீங்கும். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.

மிதுனம்

மிதுனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். திட்டமிடாதசெலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சகஊழியர்களால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

கடகம்

கடகம்: எந்த பிரச்சினையையும் சமாளிக்கும். மனப்பக்குவம் கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூட்சமங்களையும் உணர்வீர்கள். சிறப்பான நாள்.

சிம்மம்

சிம்மம்:  எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள் நண்பர்களிடம் மன விட்டுப் பேசுவீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.

கன்னி

கன்னி:  கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிட்டும். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.

துலாம்

துலாம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமை இருந்து கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் புது முயற்சிகள் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம்

விருச்சிகம்: கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமை வெளிப்படும் நாள்.

தனுசு

தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.

மகரம்

மகரம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

கும்பம்

கும்பம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாருக்கு மருத்துவ செலவுகள் வந்துபோகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரசினை தீரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.

மீனம்

மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். ஊழியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.