மேஷம்
சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகளை குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்து போட்டு பார்க்க வேண்டி இருக்கும். நயமாக பேசுபவர்களை நம்ப வேண்டாம். நன்றி மறந்த ஒருவரை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்து கொள்ளாதீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.
ரிஷபம்
கடினமான காரியத்தையும் எளிதாக முடிப்பீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுகொள்வார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வேற்று மதத்தவர் உதவுவார்கள்.வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும். திறமைகள் வெளிப்படும் நாள்.
மிதுனம்
சமயோசிதமாகவும் சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பிள்ளைகளால் புகழ் கௌரவம் உயரும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புதியவர்கள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லி தருவார். அமோகமான நாள்.
கடகம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் பழைய சிக்கல் தீரும். புதுமை படைக்கும் நாள்.
சிம்மம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. புது வேலை அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.
கன்னி
குடும்பத்தில் இருந்து வந்த பழைய பிரச்சினைகளுக்கு முக்கியதீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தைரியம் கூடும் நாள்.
துலாம்
சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்பட தொடங்குவீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.
விருச்சிகம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் முக்கிய அலுவல்களை மற்றவர்களை நம்பி ஒப்படைக்காமல் நீங்களே செய்து முடிப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடிவிற்பீர்கள். உத்தியோகத்தில் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.
தனுசு
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர் நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். யாரிடமும் உணர்ச்சிவசப்பட்ட பேசாதீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
மகரம்
திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்கு வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் முக்கியத்துவம் தருவார்கள். சாதிக்கும் நாள்.
கும்பம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். கடமை உணர்வுடன் செயல்பட வேண்டிய நாள்.
மீனம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். வியாபாரத்தில்எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மனசாட்சிபடி செயல்படும் நாள்.