குற்றவாளிகளை ஹீரோக்களாக்க வேண்டாம் – கார்த்தி சிதம்பரம்

 


ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை ஹீரோக்களாக்க வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகள் என்று சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டவர்களை ஹீரோக்களாக்க வேண்டாம். 

அவருடன் உயிரிழந்த மற்ற தமிழர்களை குறித்து யாரும் பேசுவது கிடையாது. தண்டனை வழங்கப்பட்டவர்கள், சட்டரீதியாக விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

தொடர்ந்து பேசிய அவர்,போலீசிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என நினைப்பவர்கள்தான் பாஜகவில் இணைகிறார்கள். 

மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கு வர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். கமல் தனித்து போட்டியிட்டால், சொற்ப வாக்குகள் தான் பெறுவார். ஆகையால், கமல்  தேர்தலில் சரியான முடிவுகள் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.