சசிகலாவை தொடர்ந்து இளவரசியும் விடுதலை -சுதாகரன் விடுதலை தாமதமாக வாய்ப்பு

 


சசிகலாவை தொடர்ந்து அடுத்த மாதம்  5-ஆம் தேதி சிறையில் இருந்து இளவரசியும் விடுதலையாகிறார்.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வர் மீது நடந்துவந்த சொத்துக்குவிப்பு வழக்கில், கடந்த 2014-ம் ஆண்டு பெங்களூர் தனி நீதிமன்றம் நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும், ஜெயலலிதாவைத் தவிர பிற மூவருக்கு 10 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. 

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி  மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேருக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது அதை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு உறுதி செய்தது. பின்னர், 2017ம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.

சசிகலா உள்ளிட்ட 3 பேரின் தண்டனை காலம் வரும் பிப்ரவரி மாதம் முடிவடைகிறது. இதனால், சசிகலா விடுதலை குறித்த தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கீழ் கேட்ட  நரசிம்மமூர்த்திக்கு, அபராதத்தை செலுத்தினால் சசிகலா ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்படுவார் என சிறை நிர்வாகம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இளவரசி அடுத்த மாதம்  5-ஆம் தேதி சிறையில் இருந்து விடுதலை ஆகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது .வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலை ஆக உள்ள நிலையில் ஒரு வாரம் கழித்து இளவரசியும் விடுதலையாகிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


``1995-ம் ஆண்டு சென்னையில் நடந்த அந்தத் திருமணம், தமிழகத்தையே திரும்பிப் பார்க்கவைத்தது. அன்று அந்தத் திருமணத்தில் கதாநாயகனாக ஜொலித்த மாப்பிள்ளை, இன்று 10 கோடி ரூபாய் பணம் கட்ட முடியாமல் சிறைக்குள் பரிதவிக்கும் பரிதாபநிலை ஏற்பட்டிருக்கிறது. 

அந்த மாப்பிள்ளைதான் சசிகலாவின் அக்கா மகனும், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுமான வி.சுதாகரன். ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கின் நான்காவது குற்றவாளி.

சுதாகரனின் உடன் பிறந்தவர்கள் தற்போது அ.ம.மு.க பொதுச்செயலாளராக இருக்கும் டி.டி.வி.தினகரன் மற்றும் வி.பாஸ்கரன். இந்த இருவருமே சுதாகரன் குடும்பத்தினருடன் தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். 

ஒரு நேரத்தில் `சின்ன எம்.ஜி.ஆர்’ என்று தனக்குப் பட்டம் வைத்துக்கொண்டு பந்தாவாக வலம்வந்தார் சுதாகரன். 

இந்த ஆடம்பரத்தால்ல் அவரிடமிருந்த கரன்சியும் கரைந்துபோனது. இப்போது 10 கோடி அபராதம் செலுத்த முடியாமல் அவருடைய மனைவி சத்தியலட்சுமி திண்டாடி வருகிறார் என்கிறார்கள் சுதாகரனுக்கு நெருக்கமானவர்கள். 

தனது தாய் வீடான சிவாஜி குடும்பத்தினரிடம் கணவரின் அபராத் தொகையை கட்டுமாறு கேட்டிருக்கிறார். அவர்கள் தரப்பிலும் போதிய பணத்தைத் தயார் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.

சிறையில் உள்ள மற்றொரு குற்றவாளியான சுதாகரன் இன்னும் அபராதத்தொகை ரூ.10கோடி செலுத்தாததால் விடுதலை ஆவதில் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதாகரனுக்கு நவம்பர் மாதமே அபராதத் தொகையைச் செலுத்தியிருந்தால், டிசம்பர் மாதமே அவர் விடுதலையாகியிருப்பார். 

காரணம், இந்தச் சொத்துக்குவிப்பு வழக்கில் 96-ம் ஆண்டு நுாறு நாள்களுக்கு மேல் சிறையில் இருந்திருக்கிறார் சுதாகரன். அந்த நாள்களையும் சிறைத்துறை கணக்கில் எடுத்துக்கொள்ளும் என்பதால், அவரது விடுதலையே முன்கூட்டியிருந்தது. 

ஆனால், இப்போது பணம் கட்ட முடியாமல் திண்டாடிவருவதால் விடுதலைக் காலம் வந்தும், சிறையைவிட்டு வர முடியாமல் தவிக்கிறார் சுதாகரன்.

சுதாகரனுக்குப் பண உதவி செய்ய சசிகலா குடும்பத்திலும் யாரும் தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. 

மேலும், சிறைக்குள் சென்றது முதல் தனது குடும்பத்தினர் யாரும் சிறையில் வந்து தன்னைப் பார்க்க கூடாது என்று சுதாகரன் சொல்லியிருப்பதால், அவரின் மனைவி இதுவரை சிறைக்குச் சென்று பார்க்காமல் இருக்கிறார். 

சுதாகரனின் நிலை குறித்து சசிகலா தரப்பிடம் கேட்டால், ``அவர் விவகாரத்தில் யாரும் தலையிட முடியாது. ஆரம்பம் முதலே அவர் சின்னம்மாவுக்கு ஒத்துவர மாட்டார்” என்று முடித்துக் கொள்கிறார்கள்.

சுதாகரனுக்கு 10 கோடி ரூபாய் பணத்தைக் கட்டுவார்களா அல்லது இன்னும் ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கப்போகிறாரா சுதாகரன் என்பது இன்னும் சில நாள்களில் தெரிந்துவிடும்.