தேசியக்கொடிக்கு பதிலாக தவறான கொடி பதிவிட்டு மன்னிப்பு கேட்ட குஷ்பு

 


நாடு முழுவதும் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனால், பல தலைவர்களும், பொதுமக்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில், சமீபத்தில் பாஜகவில் இணைந்த நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் குடியரசு தின வாழ்த்து தெரிவித்து, ஜெய்ஹிந்த் ஹேஷ்டேக் உடன் இந்திய தேசியக்கொடிக்கு பதிலாக மேற்கு ஆப்ரிக்காவின் நைஜர் கொடியை பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்த பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதைத்தொடர்ந்து, குஷ்பு தனது ட்வீட்டை நீக்கி விட்டு மன்னிப்பு கேட்டுள்ளார். அதில், குடியரசு தின வாழ்த்தில் தவறான கொடியை ட்வீட் செய்ததற்கு மன்னிப்புக் கேட்கிறேன். ட்விட் செய்வதற்கு முன் என்னுடைய கண்ணாடியை அணியாததை நினைத்து வருந்துகிறேன். என்னை மன்னிக்கமுடிந்தால் மன்னிக்கவும் என பதிவிட்டுள்ளார்.