லண்டனில் கொரோனா ஊரடங்கை மீறியதற்காக திருமண உரிமையாளர்க்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த சம்பவம் கவலை அளித்துள்ளது.
லண்டன்:
திருமண விழாவில் 400 பேருக்கும் மேல் கலந்து கொண்டதால் கொரோனா ஊரடங்கை மீறலுக்காக போலீசார் அந்த தம்பதினர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தனர்.
திருமணத்திற்கு மொய் தான் 10 லட்சம் வரும்னு பாத்தா.,ரூ.10 லட்சம் அபராதம் வந்த கவலை சம்பவம்
அதாவது பிரிட்டிஷ் தலைநகரின் வடக்கே ஸ்டாம்போர்டு ஹில், எகெர்டன் சாலையில் உள்ள யேசோடே ஹடோரா பள்ளிக்குள் நடைபெற்ற இந்த திருமண விழாவில் விருந்தினர்கள் ஒன்றாக கூடியிருப்பதை கண்டு காவல்துறை இந்த அபராத்தை விதித்துள்ளனர்.
லண்டனில் காவல்துறையினர் கண்டுபிடித்த மிகப்பெரிய கட்டுப்பாடுகளை இது மீறுகிறது என்று ஈவினிங் ஸ்டாண்டர்ட் செய்தித்தாள் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.