செய்திகள்

 


டெல்லி எல்லையில் பல்வேறு மாநில விவசாயிகள் கடந்த 48 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் மத்திய அரசு நடத்திய 8 கட்ட பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. 

வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால், உச்ச நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்க வேண்டியிருக்கும் என தலைமை நீதிபதி எச்சரித்துள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று உரிய உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

_____________________

கோவாவை சேர்ந்தவர் மத்திய அமைச்சர் ஸ்ரீபத்நாயக். பாஜவை சேர்ந்த இவர், மத்திய ஆயுஷ் அமைச்சராக பொறுப்பு வகித்து வருகிறார்

வட கர்நாடக மாநிலம் அங்கோலாவில் மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் ஸ்ரீபத்நாயக் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் அவரது மனைவி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

_______________________________

“நாடு முழுவதும், முதல் கட்டமாக 3 கோடி முன்களப் பணியாளர்களுக்கு வழங்கப்படும் கொரோனா தடுப்பூசிக்காகும் செலவை மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும். அடுத்த சில மாதத்தில் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும்”  என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் வரும் 16ம் தேதி துவங்க உள்ளது. முதல் கட்டமாக, 3 கோடி சுகாதாரத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி  போடப்பட உள்ளது. 
.

__________________________

கொரோனா தொற்றுக்கான செலவுகளை சமாளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் கோவிட் செஸ் வரியை அறிமுகப்படுத்தலாமா? என அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய பட்ஜெட்-2021 வரும் பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.