செய்திகள்

 கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். 15க்கும் மேற்பட்ட மீனவர்களை சிறைபிடித்தும் படகுகளை சேதப்படுத்தியும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

________________________

மறுஅறிவிப்பு வரும் வரை நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பூசி போடும் பணி ஜனவரி 16 முதல் தொடங்க உள்ளதால் போலியோ சொட்டு மருத்து முகாம் ஒத்திவைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

_____________________________

நீர்வரத்து அதிகரிப்பால் குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏதும் இல்லை; பாதுகாப்பு நலன் கருதி குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

__________________________________

பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 வாரமாக ஒரே விலையில் நீடிக்கிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.86.96, ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.72-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

_________________________________

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.