உங்களது மொய்-ஐ இப்படியும் செலுத்தலாம்

 


மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில், போன்பே, கூகுள் பே, மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் மொய் செலுத்தும் வகையில்  ‘QR’ கோடுகள் அடங்கிய பத்திரிகையை வைத்திருந்தனர். 

மதுரை ஆலம்பாடியை சேர்ந்தவர் சிவசங்கரி, இவர் பெங்களூரில் ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். 

இவருக்கும், மதுரை பாலரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் மொய் எழுதும்   பிரிவில், மொய் எழுதுபவர்கள் மொழிப் பணத்தை டிஜிட்டல் முறையில், அதாவது போன்பே, கூகுள் பே, மொபைல் ஸ்கேன் மூலம் ஆன்லைனில் செலுத்தும் வகையில்  ‘QR’  கோடுகள் அடங்கிய பத்திரிகையை வைத்திருந்தன.

இதனையடுத்து இந்த திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரும் தங்களது மொய்ப் பணத்தை கூகுள் பே மூலம் செலுத்தி சென்றனர்.  

இதுகுறித்து மணப்பெண் சிவசங்கரி கூறுகையில், ‘கொரோனா காலத்தில் தடுப்பு நடவடிக்கையாக அதிக அளவில் மக்கள் கூடும் கூட்டத்தை குறைக்கவும், அலைச்சலை தவிர்க்கும் வகையிலும் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், மொய் எழுதும்போது சில்லறைக் கவர் ஆகியவை கிடைப்பது சிரமமாக உள்ளது.

அதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும் நேரில் வந்து மொய் பணம் செலுத்த முடியாதவர்கள் கூட google pay அல்லது போன் பே மூலம் பணத்தை செலுத்தலாம் என்றும், இதன் மூலமாக யார் எவ்வளவு வைத்துள்ளனர் என்பதை தெரிந்து கொண்டு, அவர்களுக்கு திரும்ப செலுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார். 

திருமண வீட்டாரின் இந்த முயற்சியை அப்பகுதி மக்கள் மற்றும் இந்த விழாவிற்கு வருகை தந்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.