சமையல் டிப்ஸ்

 சமையல் டிப்ஸ் 

*சப்பாத்தியோ, பூரியோ செய்யும்போது கோதுமை மாவில் சாதம் வடித்த நீர் சேர்த்து மாவை பிசைந்து செய்தால் மிகவும்  சுவையாக இருக்கும்.
 
* அதிக கனமுள்ள கல்லை தோசைக்கும், கன மில்லாத மெலிதான கல்லை சப்பாத்திக்கும் உபயோகிக்க வேண்டும். 
 
* சாதம் வடிக்கும்போது சற்று குழைந்து விட்டது போன்று தெரிந்தால் உடனே சிறிதளவு நல்லெண்ணெய்யைச் சேர்த்தால்  மேலும் குழையாமல் இருக்கும்.
 
* உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் பளபளப்பாக இருக்கும்.
 
* குழம்பு, பொரியல் செய்யும்போது உப்பு, காரம் அதிகமாகிவிட்டால் உலர்ந்த பிரெட் அல்லது ரஸ்கைப் பொடித்துத் தூவினால்  சரியாகிவிடும்.
 
* ரவா, மைதா உள்ள டப்பாவில் பூச்சி, புழுக்கள் வராமல் இருப்பதற்கு கொஞ்சம் வசம்பை தட்டிப் போட்டால் பூச்சி, புழுக்கள்  வராது.
 
* வெண்டைக்காயைப் பொரியல் செய்யும்போது புளித்த மோரைச் சேர்த்தால் வெண்டைக்காய் மொறுமொறுவென்று இருக்கும்.
 
* காய்கறிகளை வேகவைக்கும்போது அதிக தண்ணீர் வைத்து வேக வைக்க கூடாது. ஏன் என்றால் காய்கறிகளில் உள்ள  வைட்டமின் சத்துகள் போய்விடும். அதில் உள்ள மனமும் போய்விடும்.
 
* காய்ந்த மிளகாயை வறுக்கும்போது நெடி வரும். அவை வராமல் இருப்பதற்கு சிறிது உப்பு போட்டு வறுத்தால் நெடி வராது.
 
* கேழ்வரகை ஊற வைத்து அரைத்துப் பால் எடுத்து, கோதுமை அல்வா போன்று செய்யலாம். கோதுமை  அல்வாவைவிட  ருசியாக இருக்கும்.

* ரவா லட்டு செய்யும்போது அதனுடன் அவலையும் பொடித்து சிறிது நெய்யில் வறுத்து 3 டேபிள் ஸ்பூன் பால் பவுடரையும் கலந்து செய்தால் ரவா லட்டு சுவையாக இருக்கும்.

* சர்க்கரைப் பொங்கல் செய்யும்போது தேங்காய் பால் அரை கப் ஊற்றிக் கிளறிய பின் இறக்கவும். இவ்வாறு செய்தால் பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

* வாழைப்பழங்கள் வெளிபடுத்தும் வாயுக்கள் மற்ற பழங்களை எல்லாம் விரைவாக பழுக்க வைத்துவிடும், அதனால் வாழைப்பழத்தை தனியாக வைப்பது நல்லது.

* ஆப்பத்துக்கு பச்சரிசியை வெந்நீரில் நனைத்து அரைத்தால் மொறுமொறு என இருக்கும்.

* பலகாரம் செய்யும்போது கொய்யா இலையை எண்ணெயில் போட்டு எடுத்துவிட்டு பலகாரங்களைச் செய்தால் எண்ணெய் பொங்கி வழியாது.

* தக்காளியின் தோல் நீக்க மேல்பக்கமும் கீழ்ப்பக்கமும் கத்தியால் தக்காளியை சிறிது கீறிவிட்டு சுடுநீரில் போட்டு எடுத்தால் தோல் சுலபமாக வந்துவிடும்.

* சேனைக்கிழங்கு நறுக்கும் முன்பாக கையில் சிறிது தேங்காய் எண்ணெய் தடவிக்கொண்டு நறுக்கினால் கையில் அரிப்பு ஏற்படாது.

* கத்தரிக்காய் வாடாமல் இருக்க ஹhட் பாக்ஸில் வைத்து கத்திரிகாயை மூடினால் காய் வாடாமல் இருக்கும்.

* பிரெட் பக்கோடா செய்வதற்கு முன் பிரெட் ஸ்லைஸ்களை பாலில் போட்டு எடுத்த பிறகு பக்கோடா மாவில் போடவும். பிரெட் பக்கோடா சுவையாக இருக்கும்.

* துவரம் பருப்பை மிக்ஸியில் கரகரப்பாக அரைப்பதால் சமைக்கும்போது பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

இதுபோன்ற பல பயனுள்ள  தகவல்களுடன் மேலும் நமது  உண்மை   செய்திகள்  குழுவின் சமையல்  பயணம் தொடரும்.

வணக்கம் அன்புடன் கார்த்திகா