நேமம் ஆவுண்டீஸ்வரர் கோயில்

 
ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர் உடனுரை ஸ்ரீ அமிர்தாம்பிகை திருக்கோயில்

 

இறைவர் திருப்பெயர் : ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர்

இறைவியார் திருப்பெயர் : ஸ்ரீ அமிர்தாம்பிகை

இரண காயங்கள், கடும் உடல் ரோகங்களால் அவதிப்பட்டு இயற்கை ஏய்துவது கூட ஒரு துர்மரணமே ஆகும். 

தீவினைகளைத் தவிர்த்து துர்மரண தோஷத்தில் இருந்து விடுபட்டு வலியின்றி இறைவனிடி சேர நேமம், அமிர்தாம்பிகை-ஆவுண்டீஸ்வரர் ஸ்தல தரிசனம் அவசியமான பரிகாரமாகிறது. 

தீரா நோயால் அவதிப்படுபவர்களின் ரத்த உறவுகள் இத்தலத்துக்கு நேரில் சென்று வழிபட, ஜெனனகால ஜாதகம் அனுமதித்தால் நோய் நிவர்த்தி கைகூடும். 

அதே நேரம், இறைவனின் சங்கல்பம் வேறுவகையில் இருந்தால் வலியின்றி இறைவனடி சேர வழிபிறக்கும்.

தல வரலாறு:

நவராத்தி, வெள்ளி, பூர நட்சத்திர நாட்களில் வளையல்கள் இட்டு வழிபட வேண்டிய தேவி! குங்குமப்பூவால் அர்ச்சித்திட நற்காரிய சத்திகளை அளிக்கும் அம்பிகை!

மாடு மேய்க்கும் சிறுவனின் பசுக்களில் ஓன்று லிங்க வடிவத்தின் மீது பால் கரப்பதை அறியாத சிறுவன், சாட்டையால் பசுவை அடிக்க, அந்த அடியை இறைவன் தாங்கிக் கொண்டு பசுவிற்க்கும், சிறுவனுக்கும் காட்சி தந்தான் என்பது ஐதீகம் அந்த அடையாளம் இன்னும் சிவன் மீது காணப்படுகிறது.

அமாவாசையில் பித்ரு லோகத்தார் யாவரும் வந்து வழிபடும் ஆலயம்! நவராத்திரி நாயகியாகப் போற்றபடும் தேவி. நேமம் ஸ்ரீ அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ ஆவுண்டூ ஸ்வரர் திருக்கோயில் பல கோடி யுகங்களாக இப்பூவுலகைத் தாங்கும் அஷ்டதிக்குப் பாலகர்களும், நேமம் திருக்குளத் திர்த்தத்தில் நீராடித் தம் களைப்பை இமைப்பொழுதில் போக்கிக் கொள்ள உதவும் ஒளஷதத் தீர்த்தத் தலமாக, பிணி தீர்க்கும் அருட்பெரும் ஆலய பூமியாக, நேமம் ஸ்ரீ அமிர்தாம்பிகை சமேத ஸ்ரீ ஆவுண்டீஸ்வரர் ஆலயம் விளங்குகிறது.

இறைவன் இறைவியைத் தவிர பால விநாயகர், தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், சிவவிஷ்ணு துர்க்கை, வள்ளி தெய்வானை உடன் முருகப் பெருமான், வரசித்தி விநாயகர், பைரவர், காசி விஸ்வவநாதர், விசாலாட்சி, நந்தீஸ்வரர் பல பீடம் என அனைத்தும் ஓருங்கே அமைந்துள்ளன.

இங்குள்ள சிலைகள் மிகவும் நுட்பமான முறையில் செதுக்கப்பட்டுள்ளதால், சில கோவில்களில் மட்டுமே இது போன்ற சிலைகளை உங்களால் காணமுடியும். விநாயக பெருமானின் அருளை பெற்ற பிறகு சிவ பெருமானின் அருளை பெற அவர் சன்னதியை சென்றடைந்தோம். 4.5அடி சிவலிங்கத்தை கண்டு பிரமித்து நின்ற நான், அதன் மீது சில புள்ளிகளை கண்டேன். மேலும் சிவலிங்கத்தை சுற்றியுள்ள சுவர்கள் ஆச்சரியமூட்டும் விதமாக காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை உறிந்து நீரை வெளியில் கசிந்துகொண்டு இருந்தது. குறிப்பாக இந்தக் கற்கள் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டிடம் அமைக்க பயன் படுத்தப்பட்டது எப்படி என்று யோசித்துப் பாருங்கள். மேலும் பல ஆச்சரியமூட்டும் விஷயங்களை கீழே பார்ப்போம்.

பிறகு அம்பாள் சன்னதிக்கு வருகையில், அங்கு அம்பாளின் தலை சிறிது சாய்ந்திருந்ததும் அவர்களின் வலது கால் சிறிது முன்னாள் வைக்கப்பட்டிருந்ததும் புதுவிதமாகவே இருந்தது. அவள் தலை சாய்த்து பக்தர்களின் குறைகளை கேட்கிறாள் என்று வரலாறு கூறுகிறது.

வீரபத்திரர் சிலை – இக்கோவிலில் இருக்கும் இந்த அரிய வீரபத்திரர் சிலை, சில கோவில்களில் மட்டுமே உங்களால் காண இயலும். இந்த கோவிலுக்கு செல்லும்போது, இந்த சிலையில் உள்ள நுட்பங்களை காணத்தவறாதீர்கள்.

முருகன் சிலை – இக்கோவிலின் மற்றொரு உயர்ந்த சிலை, அவர் தந்தையுடன் போட்டி போடும் விதமாக அமைந்திருக்கும்.

முன்னதாக, கோமதீஸ்வரன் என்று அழைக்கப்பட்ட நபர் எல்லா கிராமத்தினருக்கும் தியானம் கற்றுக்கொடுக்க விரும்பினார். அதை நிறைவேற்ற முடியாமல் அவர் இறந்துபோக அவரது குடுபத்தினார்கள் அவர் நினைவாக இக்கோவிலில் தியான மண்டபம் ஒன்றை கட்டினர். அவரது நினைவாக இது கோமதீஸ்வரன் நினைவு தியான மண்டபம் என்று பெயரிடப்பட்டது. 

சித்தர்கள் மற்றும் முனிவர்கள் அடங்கிய 18 படங்கள் இந்த தியான மண்டபத்தினுள் அழகாக அமைக்கப்பட்டிருக்கும். மிதமான வெளிச்சத்தை தரும் இங்கிருக்கும் விளக்குகள், ஒருவரின் வருகையின் போது அவர்களுக்கு மனஅமைதி தரும் வல்லமைவாய்ந்தது.

பல்வேறு உயிரினங்களுக்கு உயிர் கொடுக்கும் வகையில், 20க்கும் மேற்பட்ட பல வகையான மரங்கள் ஆலயத்தின் ஒரு புறத்தில் அரிதாக வைக்கப்பட்டுள்ளது. சிவனுக்கு உகந்த மரமான இங்கிருக்கும் வில்வமரத்தில், ஒரே காம்பில் ஏழு இதழ்களை நீங்கள் காணலாம். இதுவும் அரியவகையாகவே காணப்படும் மரமாகும்.

இங்குள்ள சிவாலயம் புண்ணியத் தலம் என்று குறிப்பிடப்படுகிறது. அக்காலத்தில் பைரவர் சந்நிதியை முதன்மையாகக் கொண்டு ஆலயம் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். பெண்களாய் பிறந்த ஒவ்வொருவரும் இங்குள்ள அமிர்தாம்பிகை அம்பிகையை வாழ்நாளில் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய புண்ணியஸ்தலம்.

இத்திருத்தலம் –சென்னை அடுத்துள்ள திருமழிசையிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் நேமம் என்னும் அழகிய கிராமம்

இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது உண்மை செய்திகள் குழுவின் ஆன்மீக பயணம் தொடரும்.

நன்றி. 

ஓம் நமசிவாய

மோகனா செல்வராஜ்