செய்திகள்தமிகத்தில் குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவை 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் தொடர்ந்து விற்பனை ஆகி வந்தது. தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் தமிழகத்தில் கிடைப்பதில் அமைச்சர்களுக்கும், மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. குட்கா வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்ட 30 பேருக்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது அமலாக்கத்துறை.

*******************************

வருகின்ற 22-ஆம் தேதி அனைத்து அமைச்சர்களும் தலைமைச் செயலகம் வர முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் காலை 10 மணிக்கு வரும் 22 ஆம் தேதி அனைத்து அமைச்சர்களுடன் தமிழக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

******************************

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபார்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன், உள்ளிட்ட 7 பேர் 1991-ஆம் ஆண்டு முதல் சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை முன்னதாகவே விடுதலை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

உச்சநீதிமன்றத்தில்  தன்னை விடுதலை செய்ய கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் இன்று இறுதி விசாரணை நடைபெறுகிறது.இதனால்   பேரறிவாளன் விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

******************************

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன.அதன்படி ஜனவரி 20-ஆம் தேதி  இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. புதிய வாக்காளர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டைகள் தேசிய வாக்காளர் தினத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****************************

கிராமப்புறங்களுக்கான பிரதமரின் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த  6.1 லட்சம் பயனாளிகளுக்கு,  ரூ.2,691 கோடி நிதியுதவியை பிரதமர் நரேந்திர மோடி இன்று பகல் 12 மணியளவில் காணொலிக்காட்சி வாயிலாக நடைபெறும் நிகழ்ச்சியில் விடுவிக்க உள்ளார்.  மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உத்தரபிரதேச முதலமைச்சர் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.

******************************

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் நினைவிடத்தை வருகின்ற 27-ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி அவர்கள் தலைமையேற்று திறந்து வைக்க உள்ளார்கள்.துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலை வகிப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

**************************

டெல்லியில் முதலமைச்சர் பழனிசாமி சசிகலா வருகை குறித்து கூறுகையில்,சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதற்கு வாய்ப்பு இல்லை.சசிகலாவை அதிமுகவில் இணைத்து கொள்ள மாட்டோம் என்பதில் 100% உறுதியாக உள்ளோம். ஜெயலலிதா இருந்தபோது சசிகலா அதிமுக உறுப்பினரே இல்லை .சசிகலாவுடன் இருந்தவர்கள் அதிமுகவில் இணைந்துவிட்டார்கள்

****************************