கொரோனா தடுப்பூசி செய்திகள்கொரோனா தடுப்பூசி போடுவதற்கான 2-ம்கட்ட ஒத்திகை நேற்று நடைபெற்றது. இதையடுத்து, தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்க இருப்பதால், இதுகுறித்து அனைத்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி, வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தாக்குதல் தொடங்கியதில் இருந்து அவர் அவ்வப்போது முதல்-மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட பிறகு அவர் முதல்-மந்திரிகளுடன் விவாதிப்பது இதுவே முதல்முறை ஆகும். நாட்டில் தற்போதைய கொரோனா பரவல் நிலவரம், மாநிலங்களுக்கு தடுப்பூசி வினியோகம, தடுப்பூசி போடும் பணியை தொடங்குவது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து அவர் கலந்தாலோசனை நடத்துகிறார்.

கர்நாடகத்திற்கு முதல்கட்டமாக மத்திய அரசு 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை ஒதுக்கி உள்ளது. சனிக்கிழமை( இன்று) 13.90 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மத்திய அரசிடம் இருந்து வருகிறது. 

முதல்கட்டமாக இவ்வளவு தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ள பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தடுப்பூசிகளை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து கொடுப்போம். இந்த தடுப்பூசிகள் குளிர்பதன கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்படும். மத்திய அரசு அனுமதி வழங்கியதும் கொரோனா தடுப்பூசி வினியோகம் தொடங்கப்படும்.