முக்கிய செய்திகள்

 


தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வரும் பிப்ரவரி 18-ம் தேதி முதல் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பொறியியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி, 2 மற்றும் 3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் மே 21 வரை வகுப்புகள் நடைபெறும் என்றும், BE பயிலும் 2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு மே 24 பிராக்டிகல் தேர்வும், ஜூன் 2 ஆம் தேதி முதல் செமஸ்டர் தேர்வுகள் தொடங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது

**************************

தமிழகம் வரும் ஜே.பி.நட்டா மதுரையில் சட்டமன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அவர்கள் ஜன.30ம் தேதி 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். தமிழகம் வரும் ஜே.பி.நட்டா மதுரையில் சட்டமன்ற பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.மதுரையில் ஜனவரி 30 மற்றும் 31 தேதிகளில், பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

*************************

22.01.2021 அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. 

இந்நிலையில் 22.01.2021 காலை 10 மணிக்கு அதிமுக தலைமை அலுவலகத்தில் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது