ஜோயாலுக்காஸ் பொங்கல் பரிசு திருவிழா

 


ஜோயாலுக்காஸ் இந்த ஆண்டு பொங்கல் திருநாளை வாடிக்கையாளர்கள் வெகு விமரிசையாக கொண்டாட பொங்கல் பரிசு திருவிழாவை சர்வதேச ஜுவல்லரி கண்காட்சியுடன் ஏற்பாடு செய்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை நகை வாங்கும்போதும் நிச்சயப் பரிசு அளிக்கப்படுகிறது.  

இதுகுறித்து ஜோயாலுக்காஸின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கநர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில் ‘‘எங்கள் வாடிக்கையாளர்களுக்கு இந்த பொங்கல் திருநாளில், பொங்கல் பரிசுத் திருவிழாவை அளிப்பதில் மகிழ்ச்சி. மேலும் எங்களது சர்வதேச ஜுவல்லரி கண்காட்சியும் பொங்கல் பரிசுத் திருவிழாவுடன் இடம் பெறுகிறது. 

ஒவ்வொரு வாடிக்கையாளரும் மன நிறைவோடு மிகச் சிறந்த டிசைன்களை மிகச் சிறந்த விலைகளில் பெற வேண்டும். 

இதுவே எனது நோக்கம். மேலும், தமிழக மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிககை நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்றார். 

திருமணத்துக்கு நகை வாங்க சிறப்பு பேக்கேஜ், அட்வான்ஸ் புக்கிங் வசதி, பழைய தங்கத்துக்கு அதிகபட்ச பணம் பெறும் வசதி, சிறப்பு வெள்ளி பொருட்கள் மற்றும் பூஜை பொருட்கள் உட்பட பல சலுகைகள் உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.