பெல்ஜியத்திற்கு ஒரு விலை-இந்தியாவிற்கு வேறு விலை-. மத்திய அரசுக்கு காங். கேள்வி

 




நாடுமுழுவதும் ஏழைகளுக்கு இலவச கொரோனா தடுப்பூசி எப்போது மற்றும் எப்படி கிடைக்கும் என்பதை மத்திய அரசு தெளிப்வுபடுத்த வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன்  பிரதேசங்களில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார்.

சீரம் நிறுவனம் கோவிஷீல்ட் தடுப்பூசியை (ஒரு டோஸ்) ரூ.200க்கு வழங்குகிறது. லாப நோக்கம் கருதாமல் தடுப்பூசியை விநியோகம்  செய்வதாக அந்நிறுவனம் சொல்கிறது. 

ஆனால் சீரம் நிறுவனம் தடுப்பூசியை ரூ.158க்கு வழங்குவதாக பெல்ஜியத்தை சேர்ந்த அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். சீரம் நிறுவனம் மத்திய அரசுக்கு தனது தடுப்பூசியை ரூ.200க்கு ஏன் விற்பனை  செய்கிறது?

மற்றொரு தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியை ஒரு டோசுக்கு ரூ.295க்கு வழங்குகிறது. 
இந்திய ஆராய்ச்சி கவுன்சிலின் உதவியுடன் இந்த தடுப்பூசியை தயாரிக்க அந்நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.  

முதல் கட்டத்தில் 375 பேருக்கும், இரண்டாவது கட்டத்தில் 380 பேருக்கும் மட்டுமே கோவாக்சின் வழங்க நிறுவனத்துக்கு அனுமதி உள்ளது. 

மேலும் மூன்றாம் கட்ட சோதனை முடிவுக்காக பாரத் பயோடெக் காத்திருக்கிறது. ஏற்கனவே  சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு தடுப்பூசிக்கு (கோவிஷீல்ட்) ரூ.200 மட்டுமே செலவாகும் போது, இதற்கு (கோவாக்சின்) ஏன் கூடுதல் செலவாகிறது?.