மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடங்கியது
அமைச்சர் செல்லூர் ராஜூ ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஜல்லிக்கட்டு போட்டியில் 788 காளைகள். 430 காளையர்கள் பங்கேற்பு.கொரோனா தடுப்பு விதிகளுடன் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது
சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு ஒரு லட்சம் பரிசு அவனியாபுரத்தில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் சார்பில் ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று அறிவிப்பு. காங்கிரஸ் சார்பில் மாடு பிடிக்கும் காளையர்களுக்கு பைக் பரிசாக வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு வாடிவாசலில் இருந்து சீறி பாயும் காளைகளை அடக்க காளையர்கள் ஆர்வம் சிறந்த மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு ஏராளமான பரிசு பொருட்கள் வழங்கப்படடுகின்றனர்.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் இதுவரை 5 பேர் காயம்.
வெற்றி பெற்றவர்களுக்கு உடனுக்குடன் பரிசு தொகை வழங்கப்படுகிறது