பெண்களுக்கு கன்னித்தன்மை பரிசோதனை.. பாகிஸ்தான் நீதிமன்றம் அதிரடி தடை

 


பாகிஸ்தானின் அதிக மக்கள்தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பிய பெண்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நீதிமன்றம் உத்தரவு:

பஞ்சாப் மாகாணம், லாகூர் உயர்நீதிமன்றத்தில் கன்னித்தன்மை பரிசோதனை குறித்து வழக்கு ஒன்று தொடரப் பட்டிருந்தது. 

இந்த வழக்கு கடந்த திங்கட்கிழமை அன்று விசாரணைக்கு வந்த நிலையில், அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்தில், பாலியல் வன்கொடுமைகளில் இருந்து தப்பியவர்கள் மீது கன்னித்தன்மை பரிசோதனை நடத்த அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி, உலகெங்கிலும் உள்ள பல பல நாடுகளில் ஒரு பெண் அல்லது பெண்ணின் “மரியாதை அல்லது நல்லொழுக்கத்தை” மதிப்பிடுவது எனவும், அது நீண்டகால பாரம்பரியம் என தெரிவித்துள்ளது.

 சில பிராந்தியங்களில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் மீது பாலியல் தாக்குதல் நடந்ததா இல்லையா என்பதை தீர்மானிக்கவும் கன்னித்தன்மை சோதனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

மேலும், இந்த நடைமுறையை சட்டவிரோதமானது என்று அறிவித்தது, இதற்கு மருத்துவ அடிப்படை இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணியத்தை புண்படுத்தும் என கருத்து தெரிவித்துள்ளது. இது பாகிஸ்தான் நாட்டில் ஒரு முக்கிய தீர்ப்பு என பலரும் கூறி வருகின்றனர்.